Kathir News
Begin typing your search above and press return to search.

சபரிமலை வழக்கில் சிதைவுற்ற நீதியில் தனித்து நிற்கும் நாயகி நீதிபதி இந்து மல்ஹோத்ரா!

சபரிமலை வழக்கில் சிதைவுற்ற நீதியில் தனித்து நிற்கும் நாயகி நீதிபதி இந்து மல்ஹோத்ரா!

சபரிமலை வழக்கில் சிதைவுற்ற நீதியில் தனித்து நிற்கும் நாயகி நீதிபதி இந்து மல்ஹோத்ரா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Sep 2018 3:33 PM GMT

சபரிமலை கோவிலுக்குள் நுழைய 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்ககளுக்கான கதவை முரண்மிகுந்த தீர்ப்பின் மூலம் திறந்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு பெண் நீதிபதி என 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நான்கு ஆண் நீதிபதிகளும், பெரும்பான்மையான தீர்ப்பாக பாலின ரீதியில் பாகுபாடு காட்டக்கூடாது எனவும் அதே வேளையில் ஒற்றை பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா அரசியலமைப்பின் 25-ஆம் பிரிவின் கீழ் உறுதி அளிக்கப்பட்ட மத சுதந்திரத்திற்காக குரலை உயர்த்தியுள்ளார்.
விதி 3 (ஆ), கேரள இந்து பொது வழிபாட்டு இடங்கள் (நுழைவு அங்கீகரித்தல்) விதிகள், 1965(Kerala Hindu Places of Public Worship (Authorisation of Entry) Rules, 1965) என்கிற இந்த விதியை தான் பெரும்பான்மையான தீர்ப்பு தாக்கியுள்ளது. இந்த விதியின் அடிப்படையில் இக்கோவிலின் வழிபாட்டு தெய்வம் பிரம்மச்சாரியாக இருப்பதால் மாதவிடாய் பருவத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது .
இந்த அமர்வின் ஆண் நீதிபதிகளான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அவருடன் ஆர்.நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சம உரிமை குறித்த உபதேசித்த வேளையில் ஒற்றை பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, மத அடிப்படையிலான விஷயங்களை நோக்குகிற போது பகுத்தறிவு பார்ப்பது முற்றிலும் வீண் என ஓர் எளிமையான உண்மையை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.
ஆழமான மத உணர்வுகளுக்குள் நீதிமன்றம் ஒரு போதும் குறுக்கிடக்கூடாது என்றும் இத்தனை நாளும் அங்கு வழிப்பட்டு தெய்வமாய் இருக்கும் சுவாமி ஐயப்பன் பிரம்மசாரியராக இருக்கு காரணத்தால் அஸ்தலத்தை சுற்றியுள்ள பழக்க வழக்கங்கள் அரசியல் சாசனம் பிரிவு 25-யின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.
பிரிவு 25 பல வகையிலும் இதனால் வரை இருந்து வந்த தடைக்கு அரணாக இருந்து செயல்பட்ட போதும், இத்தனை நாளும் சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் இந்த வரையரையை ஒத்து சுதந்திரமான மனசாட்சியின் அடிப்படையில் நிகழ்ந்ததா? இல்லையா என்பதே இங்கே எழும் வாதம். அதில் பெரும்பான்மையான நீதிபதிகள் இல்லை என்றும், நீதிபதி மல்ஹோத்ரா மட்டுமே அது அந்த வரையின் அடித்தொட்டே நிகழ்ந்து வந்தது என்றும் கூறியுள்ளனர்.
நேர்மையான கண் கொண்டு பிரிவு 25-ஐ நோக்கினால் அடிப்படையில் அது எவ்வாறு இந்த வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் திரிக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு விளங்கும். சுதந்திரமான மனநிலை என்பது ஹிந்துத்துவத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து மதத்திற்கும் பொருந்தும். உதாரணமாக, சீக்கியர்கள் தங்கள் தொழில் முறையில் கிர்பானா அணிவதும் உடன் வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு வேளை இந்த அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் பொருந்துமே ஆனால் ஏன் சீக்கியர்கள் அல்லாதவர்கள் அவர்களை போலவே ஆயுதம் வைத்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை?
அப்படியெனில் இந்த விதிகள் ஹிந்துக்கள் தவிர மற்ற அனைவருக்கும் சாதகமானதாக இருக்கிறது இல்லையா? இந்த தீர்ப்பினை வழங்கும் சமயத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் செய்த உபதேசங்களை ஆய்ந்து நோக்கினால் இது தெளிவாகும்.
தலைமை நீதிபதி மிஸ்ரா அவர்கள் குறிப்பிடும் போது, “ஐயப்ப பக்கதர்கள் தங்களுக்கென ஒரு தனி மதத்தை கொண்டிருக்கவில்லை என்கிறார்", இது சபரிமலையை மற்ற கோவில்களுடன் ஒப்பிடும் போக்கு. அமர்வின் தீர்ப்பின் படி நீதிபதி நாரிமான் அவர்கள் மிஸ்ராவுடன் ஒத்துபோகும் போக்கில், சபரிமலையினுள் மாதவிடாய் காலத்திற்க்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கும் வழக்கம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 25(1) ஐ மீறும் செயல் என்கிறார்.
இதற்கும் ஒரு படி மேலே சென்ற நீதிபதி சாந்திரசூட், சமூகத்தில் இருக்கும் தவறுகளையெல்லாம் திருத்தும் உன்னத பணியை மேற்கொள்ள சபதம் ஏற்றவராய் “பெண்கள் வழிபடும் உரிமையை எந்த மதமும் மறுக்கக்கூடாது. பெண்களை குறைவாக நடத்துவதென்பது அரசியல் அறநெறியை கண்டு விழிப்பதை போலாகும்” என்கிறார்.
ஓர் கோவில் தன்னுடைய சுய முடிவினால் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் முடிவு என்பது ஒட்டு மொத்த ஹிந்துத்துவ கோவில்களின் முடிவல்ல என்பதை யாரும் அவரிடம் சொல்லவில்லை போல!!
இந்த உபதேசங்களுக்கு இடையே நல்லறிவை விதைத்தவர் நீதிபதி மல்ஹோத்ரா மட்டுமே. "அத்தியாவசிய மத நடைமுறை எதுவென்பதை மத சமூகம் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அல்ல." என்ற அவர் பெரும்பான்மையோரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் ஐயப்ப பக்தர்கள் பிரிவு 25(1) யின் கீழ் தங்களுக்கென உரிமையை தருகிறது கருத்து தெரிவித்தார்.
சபரிமலை வழக்கில் சிதைவுற்ற நீதியில் தனித்து நிற்கும் ஒரே நாயகி நீதிபதி மல்ஹோத்ரா மட்டும் தான். சம உரிமை என்ற பெயரில், தனித்துவமிக்க வழக்கத்திற்கும் பாகுபாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத முழுமையான போதனை வாசத்தால் நிரம்பி விட்டது நீதிமன்றம்.
Article written based on contents from R.Jagannathan's piece in Swarajya Magazine, titled "Sabarimala Verdict: Four Male Judges Pontificate On Gender Justice, While Woman Judge Demurs"
Featured Image Credits - New Indian Express.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News