Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்து அறநிலையத்துறை நடத்திய போராட்டத்தில் "இந்து" என்ற வார்த்தையை நீக்க சொன்னது ஸ்டாலின் தானா? இந்து மத வெறுப்பின் உச்சத்தில் தி.மு.க?

இந்து அறநிலையத்துறை நடத்திய போராட்டத்தில் இந்து என்ற வார்த்தையை நீக்க சொன்னது ஸ்டாலின் தானா? இந்து மத வெறுப்பின் உச்சத்தில் தி.மு.க?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Oct 2018 12:59 PM GMT

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் ஊழல்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார் பா.ஜ.க தேசிய செயலாளர் திரு. H. ராஜா அவர்கள். இந்து விரோத திராவிட கட்சிகளின் ஆட்சியில் காணாமல் போன பண்டைய தமிழ் பொக்கிஷங்களான சோழர் காலத்து சுவாமி சிலைகளை தனது அதிகாரத்திற்கு உட்பட்டு துணிச்சலுடன் மீட்டு வருகிறார் சிலை கடத்தல் தடுப்பு ஹீரோ திரு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் அவர்கள். சிலை கடத்தல்களில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே நேரடியாக சம்மந்தப்பட்டிருப்பதையும் திரு. பொன்மாணிக்கவேல் அவர்கள் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். சிலை கடத்தல்களில் சில முக்கிய திராவிட அரசியல் புள்ளிகளும் சிக்குவார்கள் என்ற பேச்சு அடிபட்டது. அதனால் சிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிப்பதை தடுப்பதற்காக சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு "கொள்கை முடிவு" எடுத்தது. ஆனால் நீதிமன்றமோ ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பக்கமே நின்றது. தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகளை பொன்மாணிக்கவேல் தான் நடத்தி வருகிறார்.


இதையெல்லாம் சகித்து கொள்ள முடியாத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திரு. H. ராஜாவையும் ஐ. ஜி.பொன்மாணிக்கவேலையும்  கண்டித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அந்த போராட்டத்திற்கு தி.மு.க-வும் மற்றும் சில இந்து விரோத அரசியல்வாதிகளும் ஆதரவு அளித்தனர். போராட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், போராட்டத்தின் எந்த இடத்திலும் "இந்து" என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. போராட்டத்தில் பேசியவர்களும் இந்து என்ற வார்த்தையை தவிர்த்தனர். இது குறித்து போராட்டகாரர்களிடம் தினமலர் நிருபர்கள் விசாரித்த போது, தி.மு.க-வினர் இந்து என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்ததாக கூறியுள்ளனர்.


பொதுவாக இது போன்ற முடிவுகள் கட்சி தலைமையின் உத்தரவு இல்லாமல் எடுக்க முடியாது என்பது ஊரறிந்ததே. இந்து விரோத செயல்பாடுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பெயர் போனவர் தான். இஸ்லாமியர்கள் நடத்தும் இப்தார் விருந்தில் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் அணிவிக்கும் குல்லாவை அணிவது ஆனால் இந்துக்கள் அவரின் நெற்றியில் குங்குமம் இட்டால் அதை அங்கேயே அப்போதே அழித்து இந்துக்களின் மனதை புண்படுத்துவது போன்ற இந்து விரோத செயல்களை வெளிப்படையாகவே செய்து வருகிறார். ஸ்டாலினின் இந்து மத வெறுப்பிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு தான் இந்து சமய அறநிலையத்துறை நடத்திய போராட்டத்தில் இந்து என்ற வார்த்தையை நீக்கியிருப்பது. தொடர்ந்து இந்து மத வெறுப்பில் தி.மு.க மூழ்கி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.


https://youtu.be/sUxj_bYRUDo

தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு ஸ்டாலின் பதிலளிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





Next Story