Top
undefined
Begin typing your search above and press return to search.

பாலியல் குற்றத்திற்கு ஆதரவாக கட்ட பஞ்சாயத்தில் திமுக வின் தமிழன் பிரசன்னா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது

பாலியல் குற்றத்திற்கு ஆதரவாக கட்ட பஞ்சாயத்தில் திமுக வின் தமிழன் பிரசன்னா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Oct 2018 3:12 PM GMT

சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் 2 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த செய்தி, எந்த ஒரு பிரதான தமிழக ஊடகங்களிலும் செய்தியாக்க படவே இல்லை. வழக்கம் போல, அனைத்து சட்ட விரோத சம்பவங்களிலும் தி.மு.க வினருக்கு தொடர்பு இருந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விவகாரத்திலும், தி.மு.க.வைச் சேர்ந்த மீம்ஸ் புகழ் தமிழன் பிரசன்னா கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புகார் கொடுத்துள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி பேராசிரியை, நிருபர் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சில பிரச்சனைகளால் நட்பை துண்டித்துள்ளார்.
இதனை அடுத்து, நாளிதழ் நிருபர் ஒருவர் பேஸ்புக் மூலம் அந்த பேராசிரியைக்கு பழக்கமாகியுள்ளார். மேலும் அந்த பேராசிரியை உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒருமுறை பேராசிரியை வீட்டுக்கே சென்று விட்டதால், நாளிதழ் நிருபருடன் பேசுவதை பேராசிரியை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாளிதழ் நிருபருடன் பேராசிரியைக்கு நேர்ந்த சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமாகி பின்னர் நட்பு துண்டிக்கப்பட்ட மற்றொரு நிருபருக்கு தெரியவந்துள்ளது.
முதலில் பழகிய நிருபர், அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், பழகியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனால் பேராசிரியை, சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு நிருபர்களுக்கும் எதிராகவும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக நிருபர்களை விசாரணைக்கு அழைத்துள்ளார் திருமங்கலம் காவல் ஆய்வாளர். இதனை தொடர்ந்து தி.மு.க-வை சேர்ந்த தமிழன் பிரசன்னா கட்ட பஞ்சாயத்து செய்ததாக ஆசியானெட் தமிழ் செய்தி வெளியிட்டது.
தற்போது கட்ட பஞ்சாயத்து பேசிய ஆடியோவை வெளியிட்டுள்ளது ஆசியானெட் தமிழ் செய்தி.


Sourced from Asianet Tamil.
Next Story