Top
undefined
Begin typing your search above and press return to search.

காமராஜர் "நினைவு நாளை" சாக்லேட் கொடுத்து "கொண்டாடிய" காங்கிரஸ் தொண்டர்கள்

காமராஜர் நினைவு நாளை சாக்லேட் கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  2 Oct 2018 5:59 PM GMT

விழுப்புரம் மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் தொண்டர்கள் சாக்லேட் வழங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது என்று பாலிமர் செய்தி வெளியிட்டுள்ளது.
காமராஜரின் நினைவு தினத்தை ஒட்டி விழுப்புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சாக்லேட் பாக்கெட்டுகளை பிரித்து தட்டில் அவற்றை கொட்டி அனைவருக்கும் விநியோகிக்க தொடங்கினர்.
இதைக் கண்ட நிர்வாகி ஒருவர், நினைவு நாளில் சாக்லேட் வழங்குவதா எனக் கண்டிக்கவே, அந்த தொண்டர்கள் வேகமாக சாக்லேட்டுகளை ஒரு பையில் கொட்டி விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டனர்.
நினைவு நாளன்று சாக்லேட் வழங்கி கொண்டாட கூடாது என்பது கூட தெரியாத காங்கிரஸ் கட்சியினரா இந்த நாட்டை ஆள துடிக்கிறார்கள் என்ற அடிப்படை கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
Picture Courtesy : Polimer
Next Story