Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவில் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்ட காங்கிரஸ்

கேரளாவில் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்ட காங்கிரஸ்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  2 Oct 2018 7:42 AM GMT

கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது போலீசாரோடு கடும் மோதல் ஏற்பட்டது. புதிய மதுபான ஆலைகள் திறக்கும் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து கலால் வரித்துறை அலுவலகத்தின் முன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசியதையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர்.



மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் போலீசாரின் தடுப்புவேலிகளை தாண்டி காங்கிரசார் முன்னேற தொடங்கினார்கள். இதனால் போலீசார் அவர்கள் மீது மேலும் மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். ஆனாலும் காங்கிரசார் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி, கண்ணீர்புகை வீச்சில் ஈடுபட்டனர்.
இதனால் காங்கிரசார் கலைந்து ஓடினார்கள். மேலும் சிலர் போலீசார் மீது கல்வீசியும் தாக்கினார்கள். இதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. தடியடியில் காங்கிரஸ் தொண்டர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது.

Next Story