Top
undefined
Begin typing your search above and press return to search.

கற்பழிப்பு பாதிரியார் ஃபிராங்கோ முல்லகாலுக்கு ஜாமீன் மறுப்பு : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

கற்பழிப்பு பாதிரியார் ஃபிராங்கோ முல்லகாலுக்கு ஜாமீன் மறுப்பு : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Oct 2018 12:47 PM GMT

2014 – 2016 ஆண்டுகளில், கத்தோலிக்க டியோசிஸ் ஆப் ஜாலந்தர் தேவாலயத்தின் பாதிரியார் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் கன்னியாஸ்திரி ஒருவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறை மாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகாலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் காவல்துறையினர் கண்டறிந்த போதிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வந்தனர். 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இயேசுவின் சகோதரிகள் கான்வென்ட் விருந்தினர் மாளிகையில் 13 முறை தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த கன்னியாஸ்திரி.
பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் கையில் வைத்திருந்த போதிலும் அவரை கைது செய்ய கேரள காவல்துறையினர் தயங்கி வந்தனர். அரசியல்வாதிகளிடம் இருந்தும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இருந்தும் வரும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என்று செய்தி குறிப்புகள் தெரிவித்தன.
அதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மறைமாவட்டத்தின் பிஷப் ஃபிராங்கோ முல்லகால் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கன்னியாஸ்திரிகள், கேரள மாநிலம் கொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்தினர். பிறகு ஃபிராங்கோ முல்லகால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் மறுத்து தீர்ப்பளித்துள்ளது.
https://twitter.com/TimesNow/status/1047358543182139393?s=19
Next Story