Top
undefined
Begin typing your search above and press return to search.

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுவை முதல்வரை பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி : அரசியல் நாகரிகத்தை கற்றுக்கொள்வார்களா திராவிட வாதிகள் ?

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுவை முதல்வரை பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி : அரசியல் நாகரிகத்தை கற்றுக்கொள்வார்களா திராவிட வாதிகள் ?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Oct 2018 12:28 PM GMT

பாரத பிரதமர் மோடியின் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் காந்தி ஜெயந்தி அன்று பல பிரபலங்களும் அரசியல்வாதிகளும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இனங்க தூய்மை பணியில் ஈடுபட்டனர். புதுவை முதல்வர் திரு. நாராயணஸ்வாமி அவர்கள் வேட்டியை மடித்து கட்டி சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தார். புதுவை முதல்வரின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
https://twitter.com/VNarayanasami/status/1046634021810130944?s=19
இதனை பிரதமர் மோடியும் புகழ்ந்து தள்ளியுள்ளார். தூய்மை சேவையை முன்னெடுத்து பலரையும் ஊக்குவிப்பதற்கு பாராட்டுக்கள் என்று புகழ்ந்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் பா.ஜ.க கொண்டு வந்த திட்டம் என்று புதுவை முதல்வர் ஒதுங்கிவிடவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தூய்மை சேவையில் ஈடுபட்டார். பிரதமர் மோடியும் புதுவை முதல்வரை காங்கிரஸ் கட்சி காரர் என்று பாராட்ட மறுக்கவில்லை. நாட்டின் நலனில் அக்கறை கொண்டு அரசியல் நாகரிகத்தை இவர்கள் இருவரும் பேணி காத்துள்ளனர்.
https://twitter.com/narendramodi/status/1047095185350496261?s=19
ஆனால் தமிழகத்தில் உள்ள திராவிட அரசியல்வாதிகளிடையே இது போன்ற அரசியல் நாகரிகத்தை பார்ப்பது கடினம் தான். இதற்கு நேர்மாறாக ஆட்சிகள் மாற மாற அரசு திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடுவது தான் தமிழகத்தில் திராவிட பழக்கவழக்கமாக கடைபிடிக்க பட்டு வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களின் வரி பணத்தை வீணடிக்காதீர்கள் என்று நீதிமன்றமே இந்த விவகாரத்தில் அறிவுரை வழங்கியும் இது தொடர்ந்து வருவது வேதனை தான். தேசிய கட்சிகளிடம் இருந்து திராவிட கட்சிகள் இனியேனும் பாடம் கற்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Next Story