Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் பெட்ரோல் விலை குறைப்பை தொடர்ந்து பெட்ரோல் விலையை குறைத்த பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் : கள்ள மௌனம் காக்கும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் தமிழகமும்

மத்திய அரசின் பெட்ரோல் விலை குறைப்பை தொடர்ந்து பெட்ரோல் விலையை குறைத்த பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் : கள்ள மௌனம் காக்கும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் தமிழகமும்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 Oct 2018 4:20 PM GMT

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது விலை குறைப்பு தொடர்பாக ஆலோசனை நடந்தது.



பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ₹1.50 குறைத்து மத்திய மோடி அரசு. எண்ணெய் நிறுவனங்கள் ₹1 இழப்பை ஏற்று கொள்ளும். இதனால், மத்திய அரசுக்கு ₹22,000 கோடி இழப்பு ஏற்படும்.



விலை குறைப்பை அறிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநிலங்களும் விலையை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களான மராட்டியம் மற்றும் குஜராத் விலை குறைப்பை அறிவித்தது. இரு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை ₹2.50 குறைக்கப்பட்டது. இவ்வரிசையில் பிற மாநிலங்களில் விலை குறைப்பை அறிவிக்க தொடங்கியது.



உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ₹2.50 குறைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் மொத்தம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்க ₹5 குறையும்.



ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படாததை கண்டித்து மத்திய அரசை குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் கட்சி, தான் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைப்பை பற்றி எந்த அறிவிப்பும் இது வரை வெளியிடவில்லை.



Source : Dinamalar and Dinathanthi

Next Story