Top
undefined
Begin typing your search above and press return to search.

2018 செப்டம்பர் வரையிலான அரையாண்டு நேரடி வரி வசூல் மொத்தம் ₹5.47 லட்சம் கோடி : மத்திய அரசு புதிய சாதனை

2018 செப்டம்பர் வரையிலான அரையாண்டு நேரடி வரி வசூல் மொத்தம் ₹5.47 லட்சம் கோடி : மத்திய அரசு புதிய சாதனை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 Oct 2018 4:15 PM GMT

2018 செப்டம்பர் வரையிலான (அரையாண்டு கணக்குப்படி) நேரடி வரிவசூல் மொத்தம் ₹5.47 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்த வசூலைவிட 16.7 சதவீதம் அதிகமாகும்.
2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் திருப்பித் தரப்பட்ட தொகையின் அளவு ₹1.03 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பித்தரப்பட்டதைவிட இது 30.4 சதவீதம் அதிகமாகும். 2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் (திருப்பித் தரப்பட்டதைக் கழித்தபின்) மொத்த வசூல் 14 சதவீதம் அதிகரித்து ₹4.44 லட்சம் கோடியாக உள்ளது. இது 2018-19 ஆம் நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரிகளின் பட்ஜெட் மதிப்பீட்டில் (₹11.50 லட்சம் கோடி) 38.6 சதவீதம் என்பதாக மொத்த நேரடி வரிவசூல் உள்ளது.
முன்கூட்டியே செலுத்தப்படும் வரியாக ₹2.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலத்தைவிட 18.7 சதவீதம் அதிகமாகும்.

Source : PIB
Next Story