Top
undefined
Begin typing your search above and press return to search.

குடும்பத்தினர் 12 பேருடன் இந்து மதத்திற்கு திரும்பிய இஸ்லாமியர் : தனது மகனின் மர்ம மரணத்தை அடுத்து அதிரடி

குடும்பத்தினர் 12 பேருடன் இந்து மதத்திற்கு திரும்பிய இஸ்லாமியர் : தனது மகனின் மர்ம மரணத்தை அடுத்து அதிரடி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 Oct 2018 6:45 PM GMT

உத்தரபிரதேச மாநிலம் சப்ரோளி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பதர்க்கா கிராமத்தில் வசிப்பவர் அக்தர். இவர் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறுவதாக துணை மண்டல மாஜிஸ்திரேட்டிடம் உறுதிச் சான்று அளித்துள்ளார்.


பாக்பத் மாவட்ட நீதிபதி ரிஷிரேந்திர குமார், அக்தர் குடும்பத்தின் மத மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.


பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அக்தர், ''எங்களுடைய மகனின் அசாதாரண மரணத்தை காவல்துறை தற்கொலை என்று கூறுகிறது. அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் மறுக்கின்றனர். இதனால் இந்து மதத்தைத் தழுவியுள்ளோம்'' என்றார்.


யுவ ஹிந்து வாகினி அமைப்பின் மாநிலத் தலைவர் ஷாகேந்திர கோகர் கூறுகையில், "இந்து மதத்தைத் தழுவிய அக்தர் குடும்பத்தினர் ஹோமம் உள்ளிட்ட தேவையான இந்து மதச் சடங்குகளைச் செய்துள்ளனர்", என்று தெரிவித்தார்.
இதுகுறித்து எஸ்பி சைலேஷ் குமார் பாண்டே கூறும்போது, ''இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வேறு சிலரும் மதம் மாற உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
Source : PTI
Next Story