Top
undefined
Begin typing your search above and press return to search.

போலி ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி தண்டிக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய தேர்தல் ஆணையம்

போலி ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி தண்டிக்கப்பட வேண்டும் : கடுமையாக சாடிய தேர்தல் ஆணையம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 Oct 2018 6:44 PM GMT

போலி ஆதாரங்களை அளித்து உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடுத்துவதாக தேர்தல் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது.  இதற்காக காங்கிரஸ் கட்சி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வாதாடியுள்ளது.


முன்னதாக, குஜராத் வாக்காளர் பட்டியலில் 42 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. இதே போல மத்திய பிரதேச மாநிலத்திலும் கிட்டத்தட்ட 60 லட்சம் போலி வாக்காளர்களை கண்டறிந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.



இதைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், இவை அனைத்தும் "தவறாக புரிந்து கொள்ளப்பட்டவை" என்றும் "தவறாக வழிநடத்துவது" என்றும் கூறியுள்ளது. தேர்தல் நடைமுறைகளின் உத்தமத்தன்மையையும் தூய்மையையும் எப்பொழுதும் உறுதி படுத்தியிருப்பதாகவும், "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு" உறுதியளித்ததாகவும் தேர்தல் ஆணையக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.



காங்கிரஸ் கட்சியின் மனுவை போலி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இணையதளத்தில் கிடைக்கப்பெற்ற வாக்காளர் பட்டியலை நீதிமன்றத்தில் ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. காங்கிரஸால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்களும் புகைப்படங்களும் பெயர்களும் போலித்தனமாக இருந்தன என்று உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது தேர்தல் ஆணையம்.



பிறகு, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.



Source : OpIndia

Next Story