Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ₹5 குறைந்தது!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ₹5 குறைந்தது!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ₹5 குறைந்தது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Oct 2018 1:24 PM GMT

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹6.59-ம், டீசல் விலை ₹6.37-ம் அதிகரித்துள்ளது.


பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் காய் கறிகள், பழங்கள், பால் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. தனியார் பஸ், ஷேர் ஆட்டோக்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலால் வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ₹1.50-ஐ மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ் தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயை குறைக்க முடிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு ₹2.50 குறைக்கப்படுகிறது. இதேபோல அந்தந்த மாநில அரசுகள், வாட் வரியில் ₹2.50-ஐ குறைக்க வேண்டும், இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதால் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் மட்டும் ₹10,500 கோடி இழப்பு ஏற்படும். ஓராண்டுக்கு ₹21,000 கோடி இழப்பு ஏற்படும்.
₹5 விலை குறைந்தது

பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், திரிபுரா, ஜார்க்கண்ட், கோவா, ஹரியானா, ராஜஸ்தான், அருணாசலப்பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் இரண்டு ரூபாய் 50 காசுகள் வரை வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News