Top
undefined
Begin typing your search above and press return to search.

சாமியே ஐயப்பா கோஷத்துடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்ற அமைதி பேரணி : சென்னையிலும் வெடித்தது சபரிமலை புரட்சி #SaveSabarimala

சாமியே ஐயப்பா கோஷத்துடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்ற அமைதி பேரணி : சென்னையிலும் வெடித்தது சபரிமலை புரட்சி #SaveSabarimala

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Oct 2018 3:31 PM GMT

சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கேரளாவில் பொது மக்களின் போராட்டம் வெடித்தது. நாடெங்கும் இந்துக்களின் மத நம்பிக்கையை காக்கும் வகையில் பெரிய புரட்சியாக உருவெடுத்துள்ளது சபரிமலை விவகாரம்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமைதி பேரணி ஒன்று நடைபெற்றது. கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து மகாலிங்கபுரம் ஐயப்பன் சன்னதி வரை, நடைபெற்ற இந்த பேரணியில், பெண்கள் விளக்குகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். செண்டை மேளங்கள் முழங்க, சாமியே ஐயப்பா கோஷங்களுடன் நடைபெற்ற இந்த பேரணியில், 500-க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
https://twitter.com/indsamachar/status/1048914738610982913?s=19
Next Story