Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் : கெட்டுப்போன மாடு, பன்றி, கன்றுக்குட்டி இறைச்சிகள் பயன்படுத்த படுகிறதா?

ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் : கெட்டுப்போன மாடு, பன்றி, கன்றுக்குட்டி  இறைச்சிகள் பயன்படுத்த படுகிறதா?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 Oct 2018 6:30 PM GMT

கிண்டியில் செயல்பட்டுவந்த ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆசிஃப் பிரியாணி உணவகம் மீது கிளம்பியுள்ள புகாரும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பிரியாணிப் பிரியர்களை அதிர வைத்திருக்கிறது. சென்னையில், 18-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது ஆசிஃப் பிரியாணி ஹோட்டல். இவற்றுக்கு கிண்டியில் உள்ள தலைமை கிச்சனில் இருந்துதான் பிரியாணி தயாரித்து தினமும் அனுப்புகிறார்கள். இதன் தலைமை நிறுவனம் கிண்டியில் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்துதான்  மற்ற அனைத்துக் கிளைகளுக்கும் பிரியாணி தயாரித்து அனுப்பப்படுகிறது. இந்தக் கடையில் உள்ள கிச்சனில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதைத் தொடர்ந்து, மாநில உணவுப் பாதுகாப்பு கமிஷனர் அமுதாவின் உத்தரவின் பேரில் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து கெட்டுப்போன இறைச்சிகளை தெர்மோ கூல் பாக்ஸில் பேக் செய்து அனுப்பி வருகிறது ஒரு பயங்கர கும்பல். மாடு, பன்றி, கன்றுக்குட்டி ஆகியவற்றைக் கொன்று அதன் இறைச்சியைச் சாதாரண தெர்மோ கூல் பாக்ஸில் அனுப்புகிறார்கள். இதற்கென சென்னையின் பல பகுதிகளில் ஏஜென்டுகள் உண்டு. இவர்கள் மூலம் சந்தடியில்லாமல் குறைந்த விலைக்குக் கடைகளுக்கு இறைச்சி சப்ளை ஆகிவிடும். ஆசிஃப் ஹோட்டல் ரெய்டுக்குப் பிறகு, உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ரகசிய வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.



சென்னையின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் பலவும் ஏராளமான கிளைகளைத் திறந்துவிடுகின்றனர். அவற்றுக்கு சென்ட்ரலைஸ்டு கிச்சன் ஒன்று இருக்கும். அங்கிருந்து பிரியாணி தயாரித்து சப்ளை செய்கிறார்கள். இங்குதான் பிரச்னையே வருகிறது. சென்ட்ரலைஸ்டு கிச்சனில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜ் சரியாகச் செயல்பட வேண்டும். அதேபோல, உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய், அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள் லைசென்ஸ் பெற்ற கடைகளில் வாங்கியதற்கான பில்களைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும். அதேபோல, மீதமாகும் உணவுப் பொருள்களை எப்படி அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்ட வேண்டும். இதுமாதிரியான நடைமுறைகள் இருந்தும், சில ஹோட்டல்காரர்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.



Source : Vikatan

Next Story