Top
undefined
Begin typing your search above and press return to search.

"மாற்று மதத்தை சேர்ந்த ஆணை காதலித்ததால் அவளை மரத்தில் கட்டி வைத்து அடித்தோம்" - இந்து ஆணை காதலித்த இஸ்லாமிய பெண்ணின் தந்தை!

மாற்று மதத்தை சேர்ந்த ஆணை காதலித்ததால் அவளை மரத்தில் கட்டி வைத்து அடித்தோம் - இந்து ஆணை காதலித்த இஸ்லாமிய பெண்ணின் தந்தை!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Oct 2018 2:54 PM GMT

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில், முஹம்மது பாரீத் அன்சாரி என்பவரின் மகாளான 18 வயது இஸ்லாமிய பெண், இந்து மதத்தை சேர்ந்த ரூபேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்பினர். ஆனால், அதற்கு அந்த பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை. இதனால் அந்த பெண் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலனுடன் சேர்ந்துள்ளார்.
இதை அறிந்த பெண் வீட்டார் காதலனின் இடத்திற்கு சென்று பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். பிறகு கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
மாற்று மதத்தை சேர்ந்தவரை காதலித்த குற்றத்திற்காக கிராம பஞ்சாயத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டு, அந்த பெண்ணை ஒரு மரத்தில் கட்டி வைத்து கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஜோகியாமாரன் என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை(3 அக்டோபர் 2018) அன்று இந்த சம்பவம் நடைபெற்றது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அந்த பெண்ணை மரத்தில் கட்டி அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்த பெண்ணை கட்டி வைத்து அடித்ததை தடுத்து அந்த பெண்ணை காப்பாற்ற யாருமே முன் வரவில்லை.
[caption id="attachment_3705" align="alignnone" width="300"]
Source : Twitter/ANI News[/caption]
பிறகு, காவல் துறையினர் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
[caption id="attachment_3706" align="alignnone" width="300"] Source : Twitter/ANI News[/caption]
இது குறித்து அந்த பெண்ணின் தந்தை கூறுகையில், "மாற்று மதத்தை சேர்ந்த ஆணை காதலித்ததால் அவள் ஒரு கிரிமினல். அதனால் அவளை மரத்தில் கட்டி வைத்து அடித்தோம்", என்று கூறினார்.
Based on Inputs from India Today.
Next Story