Top
undefined
Begin typing your search above and press return to search.

விரைவில் மூடு விழா காணுமா தமிழகத்தின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் ? ஆசிஃப் பிரியாணி ரெய்டுக்கு பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்.!

விரைவில் மூடு விழா காணுமா தமிழகத்தின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் ? ஆசிஃப் பிரியாணி ரெய்டுக்கு பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்.!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Oct 2018 6:06 PM GMT

வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து கெட்டுப்போன இறைச்சிகளை தெர்மோ கூல் பாக்ஸில் பேக் செய்து அனுப்பி வருகிறது ஒரு பயங்கர கும்பல். மாடு, பன்றி, கன்றுக்குட்டி... ஆகியவற்றைக் கொன்று அதன் இறைச்சியைச் சாதாரண தெர்மோ கூல் பாக்ஸில் அனுப்புகிறார்கள். இதற்கென சென்னையின் பல பகுதிகளில் ஏஜென்டுகள் உண்டு. இவர்கள் மூலம் சந்தடியில்லாமல் குறைந்த விலைக்குக் கடைகளுக்கு இறைச்சி சப்ளை ஆகிவிடும். ஆசிஃப் பிரியாணி ஹோட்டல் ரெய்டுக்குப் பிறகு, உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ரகசிய வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.



சென்னையின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் பலவும் ஏராளமான கிளைகளைத் திறந்துவிடுகின்றனர். அவற்றுக்கு சென்ட்ரலைஸ்டு கிச்சன் ஒன்று இருக்கும். அங்கிருந்து பிரியாணி தயாரித்து சப்ளை செய்கிறார்கள். இங்குதான் பிரச்னையே வருகிறது. சென்ட்ரலைஸ்டு கிச்சனில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜ் சரியாகச் செயல்பட வேண்டும். அதேபோல, உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய், அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள் லைசென்ஸ் பெற்ற கடைகளில் வாங்கியதற்கான பில்களைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும். அதேபோல, மீதமாகும் உணவுப் பொருள்களை எப்படி அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்ட வேண்டும். இதுமாதிரியான நடைமுறைகள் இருந்தும், சில ஹோட்டல்காரர்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.



இந்த நிலையில் சமீபத்தில் அதிகாரிகளை சோதனை நடத்தியபோது பில் புக் ஒன்று சிக்கியது. அதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ந்தனர். சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு இறைச்சி சப்ளை செய்த வகையில் பணப் பாக்கி இருப்பது தொடர்பான தகவல்கள் அதில் எழுதப்பட்டிருந்ததாம். அடுத்தகட்டமாக, அதில் குறிப்பிட்டுள்ள ஹோட்டல் தரப்பினர் மீது என்ன வகையான நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட ஆலோசனை நடக்கிறது.



இதே நேரத்தில், கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வெளிமாநில ரயிலில் 1,800 கிலோ இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றினர். சாதாரண தெர்மோ கூல் பேக்கில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் இறைச்சி கெட்டுப்போன நிலையில் இருந்தது. இப்படி அடுத்தடுத்து கெட்டுப்போன இறைச்சி விவகாரம் சென்னை ஹோட்டல் தரப்பினரை கதிகலங்க வைத்துள்ளது. கிண்டியில் செயல்பட்டுவந்த ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்ட பிறகு தான் இது தொடர்பான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Next Story