Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக திரைத்துறையில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி அமைப்பு : #MeToo தொடர்பாக வாயை திறந்த விஷால்

தமிழக திரைத்துறையில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி அமைப்பு : #MeToo தொடர்பாக வாயை திறந்த விஷால்

SG SuryahBy : SG Suryah

  |  13 Oct 2018 4:58 PM GMT

தமிழ் சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி அமைப்பை உருவாக்கி வருவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ள #MeToo விவகாரத்தில் பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பேரமைதி காத்து வருகின்றனர். இதனை அடுத்து நடிகர் சங்க தலைவர் விஷால் தற்போது கருத்து கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
https://twitter.com/ThanthiTV/status/1051149046918725632?s=19
ஆனால், நடிகர் விஷால் துணிச்சலான நடவடிக்கை எடுக்க தவறி விட்டார் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
https://twitter.com/imanojprabakar/status/1051147697032314881?s=19
முன்னதாக பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் #MeToo பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு அளித்து, பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து, கமலஹாசனும், குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து கூற முடியும் என்று பட்டும் படாமல் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான அரசியல் வாதிகளும் திரை துறையினரும் பேரமைதி காத்து வருவது பல விதமான கேள்விகளை எழுப்புகிறது.
Next Story