Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் போரட்டத்தை ஒருங்கிணைக்க ₹50 இலட்சம் கொடுக்கப்பட்டதா ? 13 பேர் உயரிழப்பிற்கு பின்னணியில் இடதுசாரிகளா? : வெளிவரும் உண்மைகள்

ஸ்டெர்லைட் போரட்டத்தை ஒருங்கிணைக்க ₹50 இலட்சம் கொடுக்கப்பட்டதா ? 13 பேர் உயரிழப்பிற்கு பின்னணியில் இடதுசாரிகளா? : வெளிவரும் உண்மைகள்

SG SuryahBy : SG Suryah

  |  13 Oct 2018 6:35 PM GMT

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தது, கொலை செய்ய முயன்றது, அரசு ஊழியர்களை தாக்கியது, கலகத்தை உருவாக்கியது ஆகிய வழக்குகளின் கீழ் 20 அமைப்பை சார்ந்தவர்களின் மீது சி.பி.ஐ வழக்கு பதிந்துள்ளது. தாக்குதலின் போது 13 பேர் உயிரிழக்க காரணமாக இருந்ததாக கூறி தூத்துக்குடி வியாபாரிகள் சங்கம், மீனவர்கள் சங்கம், மற்றும் வீராங்கனை குழு ஆகிய அமைப்பை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கடந்த திங்கள் அன்று சி.பி.ஐ இந்த வழக்குகளை பதிந்துள்ளது.


குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தப்பட்ட போராட்டங்களின் பின் அதிர்ச்சியூட்டும் சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஜூலை மாதத்தில் நிகழ்ந்த போராட்டத்திற்கு சில வாரங்கள் கழிந்த பின் தூத்துக்குடி, தெரசாபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர், அன்று நடந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும், இடது சாரியை சேர்ந்த வழக்கறிஞர் அமைப்பான மக்கள் அதிகாரம் அமைப்பு சில அப்பாவி இளைஞர்களை தூண்டி இதை செய்திருப்பதாகவும் மனுவொன்றை மாவட்ட சட்ட சேவை மையத்தில் சமர்ப்பித்துள்ளார். மற்றும் உள்ளூர்வாசிகள் பலரும் ஸ்டெர்லைட் ஆலைகளை மீண்டும் திறப்பதற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்ற நாளில் அந்த வன்முறை நிகழ அப்பாவி கூட்டத்தை தூண்டி விட்டு ஏதொவொரு வகையில் அந்த வன்முறை நிகழ காரணமாக இருந்த அமைப்புகள் அனைத்தின் மீது சிபிஐ வழக்கை பதிந்துள்ளது.


இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை, ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சிப்காட் காவல் நிலையத்தின் ஆய்வாளரால் பதியப்பட்டது. பின்பு ஆகஸ்ட் 14 ஆம் நாள், மதுரை உயர் நீதி மன்றத்தின், மதுரை அமர்வால் இவ்வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. முதன் முதலாக  பதியப்பட்ட எப்.ஐ.ஆரி-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த முடிவு செய்தது சமூகத்தில் இருக்கும் இடது சாரி குழுக்கள் தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடது சாரி குழுக்களை சேர்ந்த தலைவர்கள் அப்பாவி மக்கள் கூட்டத்தை தூண்டி அழிவை உருவாக்கி அந்நாளில் பெரும் சச்சரவை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் தோரணையில் பல கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளன. காவல்துறையினர் முதலில் இக்கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.  இம்முயற்சி தோல்வியில் முடிந்ததால் காவல்த்துறை பணியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 போராட்டக்காரர்கள் அதன் தொடர்ச்சியாக உயிரழந்துள்ளனர். நீதிபதி சி.டி. செல்வம் மற்றும் பஷீர் அஹ்மத் அடங்கிய அமர்வு அரசின் விசாரனை அமைப்பின் செயல்பாடுகள் குறித்து சந்தேகங்களை எழுப்பினர் அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்துள்ளனர்.


ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இடது சாரி குழுக்களை சேர்ந்த போராட்டக்காரர்களே தாங்கள் தான் அப்பாவி பொதுமக்களை கலவரம் செய்ய தூண்டியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி உள்ளூர் வாசிகள் சிலர் இதை செய்தவர்களின் பெயர்களை இப்போது வெளியிடவும் துவங்கியுள்ளனர். குறிப்பாக மகேஷ் என்ற நபருக்கு இது போன்ற போரட்டத்தை ஒருங்கிணைத்தற்காக ₹50 இலட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் வழக்கில் பொதுமக்களின் தரப்பை கேட்டுகொண்டிருக்கும் மூன்று பேரடங்கிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்பாகவும் அனைத்து ஊடகங்களின் முன்பாகவும் தங்கள் தரப்பை சொல்ல முன்வந்துள்ளனர் உள்ளூர் வாசிகள்.


அது மட்டுமன்றி மாநிலத்தில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு பின் அப் பகுதியை சாந்த தேவாலையங்கள்  ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்ட ஸ்வராஜ்ய பத்திரிக்கை, இதில் ஈடுபட்டுள்ள அப் பகுதியை சார்ந்த தேவாலையங்கள் அதன் உறுப்பினர்களை இந்த போரட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த பேரழிவுச் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு முன்பாக ஓர் தேவாலையத்தின் முன் 5000 பேர் வரையிலான ஓர் பெருங்கூட்டம் திரண்டிருந்ததாகவும் அப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.


நடைபெற்ற இப்போராட்டத்தில் சில நக்சல் அமைப்பின் அம்சங்கள் இருந்ததாக உளவுத்துறையின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதை காட்டிலும் தேவாலயம் மற்றும் இடது சாரிகளுக்கு இந்த போராட்டத்தில் மிக அதிகமான கொடிய எண்ணங்கள் இருந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட சமூகத்தை காட்டிலும், விவசாயிகளுக்கு உதவுவதை காட்டிலும் இடது சாரி அமைப்புகளுக்கும் தேவாலையங்களுக்கும் இருந்த உண்மையான கோர முகம் இதன் மூலம் மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.


Inputs - Rightlog
Next Story