Top
undefined
Begin typing your search above and press return to search.

“கவிதைக்கு பொய் அழகு”, ஆனால் ‘காம’ப்பேரரசுக்கு பொய்யுரைத்தல் அழகா?

“கவிதைக்கு பொய் அழகு”, ஆனால் ‘காம’ப்பேரரசுக்கு பொய்யுரைத்தல் அழகா?

SG SuryahBy : SG Suryah

  |  14 Oct 2018 10:47 AM GMT

காமப்பேரரசு வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை அடுத்து தன் மீது தொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். வீடியோ மூலம் அவர் அளித்துள்ள விளக்கத்தில், தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும்,  அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் முழுக்க பொய்யானது எனவும் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாடகி சின்மயி ட்வீட் செய்கையில், "வைரமுத்துவிற்கு பொய் கண்டறியும் சோதனை தான் செய்ய வேண்டும்", என்று மிகவும் துணிச்சலாக கூறியுள்ளார்.


இது தொடர்பாக அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கருத்து தெரிவிக்கையில், "வைரமுத்து அவர்கள் அவதூறு வழக்கு தொடுத்திருக்க வேண்டாமா?, வழக்கு பதிவு செய்தால் எதிர்கொள்கிறேன் என்கிறார்", என்று விமர்சித்துள்ளார்.


மக்களின் ஆதரவும் பாடகி சின்மயி பக்கம் தான் அதிகம் உள்ளது. பாலியல் குற்றங்களுக்கு பிறகு, தற்போது பொய் கூறுவதை ஆரம்பித்துள்ளாரா வைரமுத்து என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Next Story