Top
undefined
Begin typing your search above and press return to search.

தெற்கு மண்டல விமான நிலையங்களில் மூலிகை தோட்டங்கள் : தேசிய ஆயுர்வேத தினத்தை ஒட்டி அசத்தல் நடவடிக்கை

தெற்கு மண்டல விமான நிலையங்களில் மூலிகை தோட்டங்கள் : தேசிய ஆயுர்வேத தினத்தை ஒட்டி அசத்தல் நடவடிக்கை

SG SuryahBy : SG Suryah

  |  15 Oct 2018 6:28 PM GMT

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தெற்கு மண்டல பிரிவு இம்மண்டலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மூலிகைத் தோட்டங்களை உருவாக்கவிருக்கிறது. தேசிய ஆயுர்வேத நாளையொட்டி 17.10.2018 அன்று தொடங்கவிருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், 40,000 மருத்துவ தன்மைக் கொண்ட புல், செடி, கொடி மற்றும் மரங்களை நட்டு இம்மூலிகைத் தோட்டங்களை உருவாக்கப்படும். விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலமாக குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய  விமான நிலைய ஆணையத்தின் 21 விமான நிலையங்களில் மொத்தம் 40 இடங்களில் காலை பத்து மணி முதல்  10.05 மணி வரை 5 நிமிடங்களுக்கு 40,000-க்கும் மேற்பட்ட மூலிகை மரக்கன்றுகள் நடப்படுவதே இந்நிகழ்ச்சியின் தனித்துவமாகும்.
மூலிகைகளும், மசாலாப் பொருட்களை வழங்கக் கூடிய செடிகளும், தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், உணவை ருசிகரமாக ஆக்குவதோடு இவை பல உடல் உபாதைகளை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுகின்றன. இதனைக் கருத்தாகக் கொண்டு “ஸ்வச் பாரத் ஸ்வஸ்த் பாரத்” என்பதே இத்திட்டத்தின் மையக்கருத்தாகும்.
இந்நாளில் தெற்கு மண்டலத்தில் உள்ள 21 விமான நிலையங்களிலும் மற்றும் அதன் வளாகங்களிலும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் இலச்சினை பிரதிபலிக்கும் மூலிகை மரக்கன்றுகள் காலை பத்து மணி முதல் அனைத்து பார்வையாளர்களும் காணும் வண்ணம் விமான நிலையத்திற்கு எதிரிலும், விமான நிலைய கட்டிடத்திற்கு முன்பாகவும், மற்றும் ஏதேனும் பொருத்தமான இடத்திலும் நடப்படும். மேலும் இப்பணி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஊழியர் குடியிருப்புப் பகுதிகள்,  ஒலிபரப்பு மற்றும் ரேடார் மையங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இப்பணி அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே நேரத்தில்  காலை பத்து மணி தொடங்கி 10.05-க்கு முடிவு பெறும். சென்னையில் இத்திட்டம் கீழ் காணும் இடங்களில் நடைபெறும். ஏ.ஏ.ஐ. (தெற்கு மண்டல) ஊழியர் குடியிருப்பு; கேந்திரிய  வித்யாலயா, மீனம்பாக்கம், டபிள்யூ.டி ஸ்டேஷன் – முகலிவாக்கம், ரேடார் ஸ்டேஷன் போரூர், ஏ.டி.எஸ் பிளாக் - சென்னை, சென்னை விமான நிலையம், “புதிய தீயணைப்பு நிலையத்திற்கு பின்புறம் மற்றும் ஏ.ஏ.ஐ.ஊழியர் குடியிருப்பு.
இத்திட்டத்திற்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தெற்கு மண்டல நிர்வாக இயக்குநர் திரு எஸ். ஸ்ரீகுமார் பங்குகொள்ள விரும்புவோரின் ஒத்துழைப்பையும், பங்கேற்பையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Inputs from PIB
Next Story