Top
undefined
Begin typing your search above and press return to search.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி -க்களை விரட்டி அடிக்கும் ஐயப்ப பக்தர்கள் : கேரளாவை ஸ்தம்பிக்க வைக்கும் சபரிமலை புரட்சி

கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி -க்களை விரட்டி அடிக்கும் ஐயப்ப பக்தர்கள் : கேரளாவை ஸ்தம்பிக்க வைக்கும் சபரிமலை புரட்சி

SG SuryahBy : SG Suryah

  |  16 Oct 2018 1:27 PM GMT

சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கேரளாவில் பொது மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. நாடெங்கும் இந்துக்களின் மத நம்பிக்கையை காக்கும் வகையில் பெரிய புரட்சியாக உருவெடுத்துள்ளது சபரிமலை விவகாரம்.
இதனையடுத்து அமைதியான அறவழி போராட்டத்தை ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலம் முழுவதம் தினமும் நடத்தி வருகின்றனர். கேரளாவை ஆளும் இந்து விரோத கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஐயப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு சற்றும் செவி சாய்க்காமல், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க மறுப்பது தொடர்பாக அரசானை வெளியிட மறுத்து வருகிறது.
இதனால் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் கேரள மக்கள். கேரளாவில், இந்து விரோத கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் எங்கு சென்றாலும் அவர்களின் வாகனங்கள் வழி மறிக்கப்படுகிறது.

Next Story