Top
undefined
Begin typing your search above and press return to search.

#SaveSabarimala சபரிமலை போராட்டத்தின் போது மரத்தில் கயிறு கட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண் : கேரளாவில் பரபரப்பு

#SaveSabarimala சபரிமலை போராட்டத்தின் போது மரத்தில் கயிறு கட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண் : கேரளாவில் பரபரப்பு

SG SuryahBy : SG Suryah

  |  16 Oct 2018 10:58 AM GMT

சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கேரளாவில் பொது மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. நாடெங்கும் இந்துக்களின் மத நம்பிக்கையை காக்கும் வகையில் பெரிய புரட்சியாக உருவெடுத்துள்ளது சபரிமலை விவகாரம்.
இதனையடுத்து, இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை போராட்டம் ஒன்றில், பெண் ஒருவர், கயிறை மரத்தில் கட்டி, கழுத்தை நெரித்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.


பின்னர், ஊர் மக்களால் மீட்கப்பட்டார் அந்த பெண். இதனை அடுத்து கேரள மாநிலத்தில் பரபரப்பு நிலவுகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இந்துக்களின் மனம் புண்பட்டிருப்பதை நீதிமன்றங்கள் உணருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Next Story