Top
undefined
Begin typing your search above and press return to search.

பகத் சிங் பிறந்த நாளை கொண்டாடியது ஒரு குற்றமா ? கோவை அரசு கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி

பகத் சிங் பிறந்த நாளை கொண்டாடியது ஒரு குற்றமா ? கோவை அரசு கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி

SG SuryahBy : SG Suryah

  |  16 Oct 2018 5:10 PM GMT

கோவை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ வரலாறு முதலாம் ஆண்டு பயின்று வருகிறார், மாணவி மாலதி. இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவிகளுடன் வீர பகத்சிங் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது பகத்சிங் தொடர்பான உரையாடல்களும் நடந்துள்ளன. பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதால் மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முதல்வர் சித்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ எம்.ஏ வரலாறு முதலாம் ஆண்டு பயிலும் மாலதி கடந்த 28-09-2018 அன்று பல மாணவர், மாணவிகளை அழைத்து கல்லூரி வளாகத்தில் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார். இக் கூட்டம் நடத்த கல்லூரி முதல்வரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட பின்பும் பிற மாணவ- மாணவிகளை அழைத்து கூட்டம் கூட்டி கல்லூரியின் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். எனவே இது தொடர்பான விசாரணை அறிக்கை பெறப்படும் வரை 01-10-2018-லிருந்து மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எம்.ஏ முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மாலதியை மட்டும் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


இந்த இடைநீக்கதிற்கு பின்னணியில் வேறு ஏதேனும் மறைமுக காரணம் இருக்குமோ என்ற கேள்வி வலுத்து வருகிறது.
Next Story