Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழர்களை கொச்சைப்படுத்திய காங்கிரஸ் அமைச்சர் சித்துவுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் குதித்த பா.ஜ.க! "தமிழ் உணர்வாளர்கள் எங்கே?" என வெளுத்து வாங்கிய தமிழிசை

தமிழர்களை கொச்சைப்படுத்திய காங்கிரஸ் அமைச்சர் சித்துவுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் குதித்த பா.ஜ.க! தமிழ் உணர்வாளர்கள் எங்கே? என வெளுத்து வாங்கிய தமிழிசை

SG SuryahBy : SG Suryah

  |  16 Oct 2018 7:41 AM GMT

புது டெல்லியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாப் மாநில அரசின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் நவ்ஜோத் சித்து கலந்து கொண்டு பேசிய பேச்சு கோடிக்கணக்கான தென்னிந்தியர்களை கொதிப்படைய வைத்தது.
இந்நிலையில் தமிழ்மொழி பற்றி மோசமாக விமர்சனம் செய்த சித்துவுக்கு எதிராக சென்னையில் பாரதிய ஜனதா சார்பில் பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
"தமிழகத்தில் தமிழையோ, தமிழ்நாட்டையோ இழித்து பேசினால் அல்லது தமிழ் மொழியை வேறுபடுத்தி பேசினால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உடனே கொதித்து எழுவார்கள். ஆனால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்து தமிழ்நாட்டை பற்றியும், தமிழர்களின் உணவு பழக்கவழக்கத்தை பற்றியும், தமிழ் மொழியை பற்றியும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். பாகிஸ்தானையும், தமிழகத்தையும் ஒப்பிட்டு தமிழ்நாட்டை விட பாகிஸ்தானுக்கு செல்வது சிறந்தது. தமிழ்நாட்டு உணவு பழக்கத்தைவிட பாகிஸ்தான் உணவு பழக்கம் சிறந்தது. பாகிஸ்தான் மொழி சிறந்தது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால், தமிழகத்தில் இருந்து ஒரு குரல் கூட எழும்பவில்லை. இதுவே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தமிழை விமர்சனம் செய்திருந்தால் உடனே பொங்கி, பொங்கி எழுவார்கள்." என காட்டமாக பேசினார்.
இன்றைய போராட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த டாக்டர்.தமிழிசை இவ்வாறு தெரிவித்தூள்ளார் "தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் உணர்வையும்,உணவையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு குறைத்து பேசி தென்னாட்டை இகழ்ந்து தமிழ்நாட்டை அவமதித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது."
https://twitter.com/DrTamilisaiBJP/status/1052094564033581056?s=20
மேலும் "தமிழின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது." என்றும் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/DrTamilisaiBJP/status/1052097660306509824?s=20
Next Story