Top
undefined
Begin typing your search above and press return to search.

சாமி Part - 2, சண்டக்கோழி Part - 2 வரிசையில் #ஓசிபஜ்ஜிதிமுக Part - 2! பஜ்ஜி திருடர்களின் கூடாரமாகிறதா ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க?

சாமி Part - 2, சண்டக்கோழி Part - 2 வரிசையில் #ஓசிபஜ்ஜிதிமுக Part - 2! பஜ்ஜி திருடர்களின் கூடாரமாகிறதா ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க?

SG SuryahBy : SG Suryah

  |  17 Oct 2018 3:49 AM GMT

ஓசி பஜ்ஜி கேட்டு ரோட்டு கடைக்காரரை தாக்கிய தி.மு.க-வினர் வீடியோ செப்டம்பர் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே மாதத்தில் இந்த சம்பவத்திற்கு முன்பு பிரியாணி கடை, பரோட்டா கடை, மொபைல் கடை, பியூட்டி பார்லர் தற்போது அரசாங்க அதிகாரி என தமிழகத்தில் நீளும் தி.மு.க நிர்வாகிகளின் கோரத்தாண்டவம் – அச்சத்தில் தமிழக மக்கள்
! என்ற கட்டுரையை பிரசுரித்து இருந்தோம்.
தற்போது சாமி Part - 2, சண்டக்கோழி Part - 2, தேவர் மகன் Part - 2 வரிசையில் #ஓசிபஜ்ஜிதிமுக Part - 2 வீடியோ வெளியாகி உள்ளது. இது தி.மு.க-வினரை அவமானத்தில் தள்ளுவது மட்டுமின்றி, முகம் சுளிக்க வைத்துள்ளது.
தற்போது மீண்டும் பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியரை, தி
​.​
மு​.​​-​வினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு, நேற்று மாலை தி.​​மு.​​க-​​வைச் சேர்ந்த கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் அகியோர் வடை, பஜ்ஜி சாப்பிட்டுள்ளனர்.
பின்னர், இவர்களிடம் கடையில் வேலை செய்த ஊழியர், சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், தாங்கள் யார் என்று தெரியுமா என்று அவர்கள் அவதூறாக பேசி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், உன்னை என்ன செய்கிறோம் பார் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, இரவு 10 மணி அளவில் தி.​​மு.​​க முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி என்பவர் தலைமையில் பத்
​துக்கும்​
 மேற்பட்டோர் உணவகத்திற்குள் வந்துள்ளனர்.
அப்போது, உள்ளே புகுந்து உரிமையாளர் தங்க ​​பாண்டியனை தரக்குறைவாக பேசியதுடன், ஊழியர் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பஜ்ஜி திருடர்களின் கூடாரமாகிறதா ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
Inputs & Featured Image Credits - News 18 Tamil
Next Story