Top
undefined
Begin typing your search above and press return to search.

500 ஆண்டுகளுக்கு பிறகு ப்ரயாக்ராஜ் என்ற உண்மை பெயரை திரும்ப பெற்ற அலகாபாத் : யோகி ஆதித்யநாத் அதிரடி

500 ஆண்டுகளுக்கு பிறகு ப்ரயாக்ராஜ் என்ற உண்மை பெயரை திரும்ப பெற்ற அலகாபாத் : யோகி ஆதித்யநாத் அதிரடி

SG SuryahBy : SG Suryah

  |  17 Oct 2018 7:16 AM GMT

16-ம் நூற்றாண்டில் முகலாயர்கள் ஆட்சி செய்த காலத்தில் ப்ரயாக் என்ற பகுதியில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி இணையும் இடத்தில் மன்னர் அக்பர் ஒரு கோட்டையை கட்டினார். அந்த பகுதிக்கு இலஹாபாத் என பெயரிடப்பட்டது. பின்னர், அவரின் பேரன், ஷாஹஜான் ஆட்சிக் காலத்தில் ப்ரயாக் என்ற பெயர் அலகாபாத் என மாற்றப்பட்டது.
500 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் தனது உண்மை பெயரை பெறுகிறது ப்ராயக்ராஜ். அலகாபாத் பெயர் மாற்றப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த பெயர் மாற்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.


இந்த பெயர் மாற்றம், இந்தியாவில் பல பகுதிகளை அடிமையாக்கிய முகலாய மன்னன் அக்பரின் பிறந்த நாளன்று வந்திருப்பது மேலும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்தியாவின் ஆன்மீக தொன்மையை நிலைநாட்ட யோகி தலைமையிலான உத்தரபிரதேச அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story