Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை அருகே பம்பையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை உடைத்து தள்ளும் கேரள காவல்துறையினர் : ஐயப்ப பக்தர்கள் மீதான கேரள கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம்

சபரிமலை அருகே பம்பையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை உடைத்து தள்ளும் கேரள காவல்துறையினர் : ஐயப்ப பக்தர்கள் மீதான கேரள கம்யூனிஸ்ட் அரசின் அராஜகம்

SG SuryahBy : SG Suryah

  |  18 Oct 2018 2:48 PM GMT

நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று புறப்பட்ட போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செய்தி சேகரிப்பதற்காக வேண்டுமென்றே பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்பியது ஊடகங்கள். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் பெண் பதிரிக்கையாளர்களுக்கும், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுல்லை வன்முறையாக சித்தரித்தது ஊடகங்கள்.
பின்னர், நிலக்கல் மற்றும் பம்பையில் ஐயப்ப பக்தர்களை கடுமையாக தாக்க துவங்கினர் கேரள காவல்துறையினர். இதில் ஐயப்ப பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், அமைதியான போராட்டத்தை வன்முறையாக சித்தரிக்க கேரள காவல்துறையினர் முடிவெடுத்து விட்டனர் போல் தெரிகிறது. அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை கடுமையாக தாக்கியுள்ளனர் கேரள காவல்துறையினர். இதற்கு பின்னால் கேரளத்தை ஆளும் இந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசு தான் இருக்கிறது என்று ஐயப்ப பக்தர்கள் கருதுகிறார்கள். கேரள காவல்துறையினர், நின்று கொண்டிருந்த வாகனங்களை கடுமையாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story