Top
undefined
Begin typing your search above and press return to search.

"இதுக்கு இவுனுங்க வெள்ளத்திலேயே மூழ்கி செத்திருக்கலாம்" : இன கலவரத்தை தூண்டும் திராவிட கழக பேச்சாளர் மதிமாறன்

இதுக்கு இவுனுங்க வெள்ளத்திலேயே மூழ்கி செத்திருக்கலாம் : இன கலவரத்தை தூண்டும் திராவிட கழக பேச்சாளர் மதிமாறன்

SG SuryahBy : SG Suryah

  |  19 Oct 2018 3:24 PM GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மிக பெரிய வரலாறு காணாத மக்கள் புரட்சியாக சபரிமலை புரட்சி வெடித்துள்ளது.
இந்த மக்கள் புரட்சியை வெறுக்கும் வகையிலும், கேரள மக்கள் மீது இனவெறியை தூண்டும் வகையிலும் திராவிட கழக பேச்சாளர் மதிமாறன் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார். இதில், "ச்சீ... இதுக்கு இவுனுங்க வெள்ளத்திலேயே மூழ்கி செத்திருக்கலாம். 100 சதவீதம் படிச்சவனுங்களாம். என்ன மயிற படிச்சானுங்களோ?", என்று கூறி இன கலவரத்தைத் தூண்டியுள்ளார்.
எந்த மக்கள் என்று குறிப்பிடாமல், 100% படித்தவர்கள் என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சமீப காலத்தில் வெள்ளம் வந்தது கேரள மாநிலத்தில் தான். எனவே வெள்ளத்தில் மூழ்கி செத்திருக்கலாம் என்று கேரள மக்களைத் தான் கூறுகிறார் என்று வெளிப்படையாக தெரிகிறது.
https://twitter.com/mathimaran/status/1053251073899556864?s=19
இந்த இன வெறி பேச்சிற்கு சமூக நல்லிணக்கத்தை காக்கிறோம் என்று கூக்குரல் இடும் திராவிட இயக்கங்களும், தி.மு.க-வும் என்ன சொல்ல போகின்றன ?
Next Story