Top
undefined
Begin typing your search above and press return to search.

200 ஐயப்ப பக்தர்கள் மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு : தொடரும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் ஐயப்ப பக்தர்கள் மீதான அடக்குமுறை

200 ஐயப்ப பக்தர்கள் மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு : தொடரும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் ஐயப்ப பக்தர்கள் மீதான அடக்குமுறை

SG SuryahBy : SG Suryah

  |  20 Oct 2018 4:22 AM GMT

சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு. இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமா மற்றும் நாத்திகவாதி பெண் பத்திரிக்கையாளர் கவிதா ஜக்கள் ஆகிய பெண்கள் சன்னிதானம் வரை வந்தபோது அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஐயப்ப பக்தர்களால் போராட்டம் நடைபெற்றது.
தற்போது நிலக்கலில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று 200 பேர் மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இஸ்லாமிய பெண்ணும், நாத்திகவாதி பெண் பத்திரிக்கையாளரும் எதற்காக சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி வலுத்து வரும் நிலையில் ஐயப்ப பக்தர்கள் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசின் காவல்துறை.
Next Story