Top
undefined
Begin typing your search above and press return to search.

"இனி நான் 50 வயது முடிந்தவுடன் தான் சபரிமலை சந்நிதானத்திற்கு வருவேன்" : மதுரையை சேர்ந்த 9 வயது சிறுமி

இனி நான் 50 வயது முடிந்தவுடன் தான் சபரிமலை சந்நிதானத்திற்கு வருவேன் : மதுரையை சேர்ந்த 9 வயது சிறுமி

SG SuryahBy : SG Suryah

  |  20 Oct 2018 3:22 AM GMT

நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று புறப்பட்ட போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செய்தி சேகரிப்பதற்காக வேண்டுமென்றே பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்பியது ஊடகங்கள். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் பெண் பத்திரிக்கையாளர்களுக்கும், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுல்லை வன்முறையாக சித்தரித்தது ஊடகங்கள்.
பிறகு, நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்நிலையில் நிலக்கல், இளவங்கல், பம்பை, ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிறகு, விளம்பரம் தேடிக்கொள்ள மாற்று மத பெண்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் சபரிமலை கோவிலுக்குள் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர். ஆனால் இது வரை எந்த பெண்ணாலும் நுழைய முடையவில்லை. இதனை தொடர்ந்து, மதுரையிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஜனனி என்ற 9 வயது சிறுமி, தான் இனி 50 வயதிற்கு பிறகு தான் சபரிமலைக்கு வருவேன் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். 9 வயது சிறுமியின் ஸ்வாமி ஐயப்பன் மீதான பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. விளம்பரம் தேடிக்கொள்ள மாற்று மத பத்திரிக்கையாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் போட்டி போட்டு கொள்ளும் தருணத்தில், தனது உண்மையான பக்தியையும் சபரிமலை கோவிலின் தொன்று தொட்ட பழக்கவழக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து, சிறுமியின் தந்தை கூறியதாக ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், "உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது என்று எங்களுக்கு தெரியாது. எனது மகளுக்கு 10 வயது முடிந்தவுடன், அவள் மீண்டும் தனது 50 வயது நிறைவடைந்த பிறகு தான் சபரிமலைக்கு வருவாள். அது வரை காத்திருப்பாள்", என்று கூறியுள்ளார்.
https://twitter.com/ANI/status/1053450768295100416?s=19
Next Story