Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹிந்து விரோதமான உச்சநீதிமன்ற தீர்ப்பு : விளம்பரம் தேடிக்கொள்ள சபரிமலைக்கு செல்லும் பெண்கள் - செண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள் கடும் தாக்கு

ஹிந்து விரோதமான உச்சநீதிமன்ற தீர்ப்பு : விளம்பரம் தேடிக்கொள்ள சபரிமலைக்கு செல்லும் பெண்கள் - செண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள் கடும் தாக்கு

SG SuryahBy : SG Suryah

  |  21 Oct 2018 4:46 AM GMT

நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி, 'லிபி' என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் ஐயப்பன் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று புறப்பட்ட போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செய்தி சேகரிப்பதற்காக வேண்டுமென்றே பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்பியது ஊடகங்கள். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் பெண் பத்திரிக்கையாளர்களுக்கும், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுல்லை வன்முறையாக சித்தரித்தது ஊடகங்கள்.
பிறகு, நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்நிலையில் நிலக்கல், இளவங்கல், பம்பை, ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.
இதன் பிறகு, இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைய இரண்டு பெண்கள் பலத்த கமாண்டோ படை போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர். இதில் ஒருவர் பத்திரிக்கையாளர். முன்னதாக லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிக்கையாளர் சபரிமலைக்குள் நுழைய முற்பட்டது குறிப்பிடத்தக்கது. வேறொருவர், ரெஹானா பாத்திமா என்ற சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பெண்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகள், உடல்நிலை, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே தர்ம சாஸ்திரம் பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்றார். தர்மத்தை நேசிக்கும் ஹிந்துப் பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்று ஜீயர் குறிப்பிட்டார். பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு ஹிந்து விரோதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியிருப்பதாக அவர் சாடினார்.
Inputs : Polimer
Next Story