Top
undefined
Begin typing your search above and press return to search.

கற்பழிப்பு பாதிரியார் ப்ஃரான்கோ முல்லகலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாதிரியார் குறியகோஸ் மர்ம சாவு : கற்பழிப்பு பாதிரியாரை எதிர்த்ததால் கொலையா?

கற்பழிப்பு பாதிரியார் ப்ஃரான்கோ முல்லகலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாதிரியார் குறியகோஸ் மர்ம சாவு : கற்பழிப்பு பாதிரியாரை எதிர்த்ததால் கொலையா?

SG SuryahBy : SG Suryah

  |  22 Oct 2018 7:34 AM GMT

ஜாலந்தர் மறைமாவட்டத்தின் பாதிரியார் குறியகோஸ் கத்துதாரா (60), கேரள கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்த பிஷப் ப்ஃரான்கோ முல்லக்கலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார். பிறகு, பிஷப் ப்ஃரான்கோ முலக்கலை குற்றம் சாட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தினார். கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் கற்பழிப்பு பாதிரியாருக்கு எதிராக முக்கிய ஆளாக கருதப்பட்ட இவர், இன்று ஜலந்தரில் போக்ராபரில் உள்ள தேவாலயத்தில் அவரது அறையில் மர்ம முறையில் இறந்து கிடந்தார்.
பாதிரியார் குறியகோசின் சகோதரர் ஜோஸ் கத்துதாரா, அவரது மரணம் குறித்து சந்தேகம் கொண்டிருப்பதாக தெரிவித்தார் என்று மாத்ருபூமி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. ப்ஃரான்கோ முல்லகலுக்கு எதிரான தனது அறிக்கையை அளித்ததற்காக அவரது சகோதரர் கொல்லப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். தேவாலய அதிகாரிகளால் குரியாகோஸ் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டார் என்று அவரது சகோதரர் கூறியதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இதனை அடுத்து, கற்பழிப்பு பாதிரியார் ப்ஃரான்கோ முல்லக்கலுக்கு எதிரான வழக்கில் முக்கிய ஆளாக இருந்தவர் மர்ம சாவு அடைந்திருப்பதை அடுத்து, அவர் மீதான கற்பழிப்பு வழக்கில் இருந்து எளிதாக வெளி வந்துவிடுவாரா என்ற கேள்வி எழுகிறது.
முன்னதாக, ஜாமினில் வெளிவந்த கற்பழிப்பு பாதிரியாருக்கு, மாலை மரியாதையுடன், தேவாலயத்தால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story