Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமாவிற்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்து சபரிமலைக்கு அழைத்து சென்ற ஐ.ஜி ஸ்ரீஜித், ஐயப்ப ஸ்வாமி முன்பு கண்ணீர் விட்டு அழுதார்

சர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமாவிற்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்து சபரிமலைக்கு அழைத்து சென்ற ஐ.ஜி ஸ்ரீஜித், ஐயப்ப ஸ்வாமி முன்பு கண்ணீர் விட்டு அழுதார்

SG SuryahBy : SG Suryah

  |  22 Oct 2018 6:17 AM GMT

நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி, லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று புறப்பட்ட போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செய்தி சேகரிப்பதற்காக வேண்டுமென்றே பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்பியது ஊடகங்கள். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் பெண் பத்திரிக்கையாளர்களுக்கும், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுல்லை வன்முறையாக சித்தரித்தது ஊடகங்கள்.
பிறகு, நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்நிலையில் நிலக்கல், இளவங்கல், பம்பை, ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.
இதன் பிறகு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர். இதில் ஒருவர் பத்திரிக்கையாளர். முன்னதாக லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிக்கையாளர் சபரிமலைக்குள் நுழைய முற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பெண்களில் வேறொருவர், “ரெஹானா பாத்திமா” என்ற சர்ச்சைக்குரிய பெண். இந்த இரண்டு பெண்களையும் காவல் சீருடையில், மிக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு அழைத்து சென்றார் காவல்துறை ஐ.ஜி. ஸ்ரீஜித். ஆனால், அவர்களால் சன்னிதானத்தினுள் நுழைய முடியவில்லை. சன்னிதானத்தின் முன் 500 மீட்டர் இடைவெளியில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் கீழே இறங்கினர்.
ஹிந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசின் ஆணையை நிறைவேற்ற துடித்த ஐ.ஜி. ஸ்ரீஜித், சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர் மல்க தரிசனம் செய்தார் என்று மலையாள செய்தியான ஜனம் டி.வி தெரிவித்துள்ளது. ஸ்வாமி ஐயப்பனிடன் மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுதாரா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன.
Next Story