Top
undefined
Begin typing your search above and press return to search.

வைரமுத்து அப்படி தான் என்பது ஓப்பன் சீக்ரட் : போட்டு உடைத்த ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி

வைரமுத்து அப்படி தான் என்பது ஓப்பன் சீக்ரட் : போட்டு உடைத்த ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி

SG SuryahBy : SG Suryah

  |  22 Oct 2018 6:07 PM GMT

ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் தாயாருமான ஏ.ஆர். ரைஹானா அவர்கள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், #MeToo விவகாரம், சபரிமலை விவகாரம் உள்பட பல விவகாரங்களை பற்றி பேசியுள்ளார் ரஹ்மானின் சகோதரி. #MeToo பிரச்சாரத்தை ஆதரிப்பதாக கூறியுள்ள அவர், பாடகி சின்மயி அவர்கள் 15 வருடத்திற்கு முன்பாகவே இதை கூறியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி கூறுவதை தான் நம்புவதாக தெரிவித்துள்ள அவர், சில பெண்கள் தம்மிடமும் வைரமுத்து பற்றி கூறியுள்ளதாக தெரிவித்தார்.
பாடகி சின்மயிக்கு இனி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வாய்ப்பளிக்க மாட்டார் என்பன போன்ற வதந்திகள் பரவுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பொதுவாக ரஹ்மான் அவர்கள் சர்சைக்குரியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்கு தான் தெரியும் என்றார். பிறகு, வைரமுத்து பற்றி பல பெண்கள் சொல்லி நான் கேட்டுருக்கிறேன் என்று தெரிவித்தார். வைரமுத்து பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் என்பது ஓபன் சீக்ரெட் தான் என்று போட்டு உடைத்தார்.
சபரிமலை விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், உண்மையான பக்தி உடைய பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியின் முழு காணொளி கீழே,
https://youtu.be/qUeLHG2ZVMw
Next Story