Top
undefined
Begin typing your search above and press return to search.

#MeToo இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் : இனி வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பாரா ?

#MeToo இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் : இனி வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பாரா ?

SG SuryahBy : SG Suryah

  |  22 Oct 2018 7:02 PM GMT

#MeToo இயக்கத்தை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "#MeToo இயக்கத்தை கவனித்து வருகிறேன். அதில் இடம்பெற்றுள்ள பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் புரிந்தவர்கள் சில பெயர்களைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். நமது துறை, சுத்தமாகவும், பெண்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும் மாறுவதை காண விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது. நானும் எனது குழுவினரும் அனைவருக்கும் பாதுகாப்பான பணிபுரியும் சூழலை உருவாக்குவதிலும், அதில் அனைவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற பாடுபடுகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலுடன் முன் வந்து குரல் கொடுப்பதற்கு சமூக வலைத்தளங்கள் பெரும் உதவியாக இருக்கிறது. எனினும், புதிய இணையதள நீதியை உருவாக்குவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவைகளை தவறாக பயன்படுத்த கூடாது.", என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/arrahman/status/1054431277951025153?s=19
இதனை அடுத்து, வைரமுத்துவின் பாடல்களுக்கு இனி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாரா என்ற கேள்வி திரைத்துறையினர் இடையே எழுந்துள்ளது. முன்னதாக ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி அளித்த ஒரு பேட்டியில், வைரமுத்து அப்படி தான் என்பது ஓபன் சீக்ரட் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story