Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி இல்லை - ப சிதம்பரம் திட்டவட்டம்!

காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி இல்லை - ப சிதம்பரம் திட்டவட்டம்!

SG SuryahBy : SG Suryah

  |  23 Oct 2018 11:25 AM GMT

அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தல் திட்டங்களை அனைத்து கட்சிகளும் தீட்டி வருகின்றன. தற்போதைய நிலவரத்தின் படி, பா.ஜ.க தான் அதிக பலத்துடன் இருக்கிறது. பா.ஜ.க -வை முறியடிப்பதற்காக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்று திரட்ட முயற்சி செய்யப்படுகிறது. காங்கிரஸ் அழைக்கும் மெகா கூட்டணியில் சேர பல கட்சிகள் தயங்குகின்றன, சமீபத்தில் மாயாவதி காங்கிரஸுடன் சேருவதில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார். ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள பல கட்சிகள் தயாராக இல்லை. கூட்டணி கட்சிகள் முடிவு செய்தால் பிரதமர் வேட்பாளராக தயார் என்று சமீபத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் "வரும் 2019 பொதுத் தேர்தலில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. சில காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே அப்படி கூறி வருகின்றனர். அவர்களை அவ்வாறு சொல்ல வேண்டாம் என்று தலைமை கூறியுள்ளது" என்றார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் பா.ஜ.க-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பா.ஜ.க-விற்கு மாற்றான ஒரு முற்போக்கான அரசை அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.
Next Story