Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை விவகாரங்களுக்கு பின்னால் சதித்திட்டம் இருப்பது உண்மை தான் : கேரள அரசை குற்றம் சாட்டும் தேவசம் போர்டு அமைச்சர்

சபரிமலை விவகாரங்களுக்கு பின்னால் சதித்திட்டம் இருப்பது உண்மை தான் : கேரள அரசை குற்றம் சாட்டும் தேவசம் போர்டு அமைச்சர்

SG SuryahBy : SG Suryah

  |  23 Oct 2018 5:48 PM GMT

அமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைத்து, பிறகு காவல்துறை தடியடி நடத்தி அதன் பின்னர் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய ஹிந்து விரோத பெண்களை சபரிமலை ஐயப்பன் ஸ்வாமி சன்னதியில் நுழைய வைக்க கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணையை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனுவை, ஆலப்புழாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஆர். ராஜேந்திரன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் சன்னதியை அழிக்க பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் மனுதாரர். காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெண்கள், சபரிமலையின் அமைதியை குலைக்கவே வரவழைக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களின் உண்மையான நோக்கங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


தேவசம் போர்டு அமைச்சர் திரு. கடகம்பல்லி சுரேந்திரன் கூறுகையில், இந்த விவகாரங்களுக்கு பின்னால் ஒரு சதித்திட்டம் இருப்பது உண்மைதான். அந்த சதிதிட்டத்தை வெளி கொண்டு வருவதற்கு கேரள அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று தேவசம் போர்டு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சிவன் கதாலி என்பவர் தாக்கல் செய்த வேறொரு மனுவில், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து தான் வருகிறார்களா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


தேவசம் போர்டு அமைச்சரே கேரள அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருப்பது, கேரள அரசின் ஹிந்து விரோத போக்கை உறுதி செய்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Inputs from The Hindu

Next Story