Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.டி. தொழிலில் ஈடுபட்டிருப்போர்களை ஒருங்கிணைத்து சமூக சேவை தளத்திற்குக் கொண்டுவரும் பலே திட்டம் : துவக்கி வைக்கிறார் மோடி

ஐ.டி. தொழிலில் ஈடுபட்டிருப்போர்களை ஒருங்கிணைத்து சமூக சேவை தளத்திற்குக் கொண்டுவரும் பலே திட்டம் : துவக்கி வைக்கிறார் மோடி

ஐ.டி. தொழிலில் ஈடுபட்டிருப்போர்களை ஒருங்கிணைத்து சமூக சேவை தளத்திற்குக் கொண்டுவரும் பலே திட்டம் : துவக்கி வைக்கிறார் மோடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2018 6:04 PM GMT

“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலி துவக்க நிகழ்ச்சியையொட்டி இந்தியா முழுவதுமுள்ள ஐ.டி. மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 24 அன்று கலந்துரையாடவுள்ளார்.
“சமூகத்திற்காக நாங்கள்” என்ற மையப்பொருளுடன் செயல்படவிருக்கும் இந்த இணையப்பக்கம், ஐ.டி. தொழிலில் ஈடுபட்டிருப்போர் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் முயற்சிகளை சமூக நோக்கங்கள், சமூக சேவை என்ற ஒரே தளத்திற்குக் கொண்டுவர உதவும். இவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு சேவை செய்வதில் குறிப்பாக தொழில்நுட்பத்தின் பயன்களை அதிகரிப்பதில் மகத்தான ஒத்துழைப்புக்கு இந்த இணையப்பக்கம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நலனுக்காக உழைக்கும் ஆர்வத்துடன் உள்ள மக்களின் விரிவான பங்கேற்பை இது உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமான தொழில்துறை தலைவர்களை பிரதமர் சந்திக்கவிருக்கிறார். ஐ.டி. தொழில் முனைவோர், ஐ.டி.ஊழியர்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றவுள்ளார். அரங்க பாணியிலான நிகழ்ச்சியில் அவர் கலந்துரையாடுவார். காணொலி காட்சி மூலமான இந்த நிகழ்வில் இந்தியா முழுவதுமுள்ள நூற்றுக்கும் அதிகமான இடங்களிலிருந்து ஐ.டி. மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : Press Information Bureau
Next Story
கதிர் தொகுப்பு
Trending News