Top
undefined
Begin typing your search above and press return to search.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரத்தை ஒதுக்கிய உச்ச நீதிமன்றம் : தொடர்ந்து ஹிந்து மதத்தை குறி வைக்கிறதா உச்ச நீதிமன்றம் ?

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரத்தை ஒதுக்கிய உச்ச நீதிமன்றம் : தொடர்ந்து ஹிந்து மதத்தை குறி வைக்கிறதா உச்ச நீதிமன்றம் ?

SG SuryahBy : SG Suryah

  |  23 Oct 2018 6:23 PM GMT

தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு இல்லாத பசுமைப் பட்டாசுகளை  உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே சமயம், தீபாவளி பண்டிகையின் போது, இரவு எட்டு மணி முதல் பத்து மணிக்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசுகளை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்யக் கூடாது என்று தடை விதித்திருப்பதுடன், இதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்கள், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுக்கான வெடிகளையே தயாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் தில்லியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பண்டிகைக் காலங்களில் கூட்டு முறையில் பட்டாசுகளை வெடிப்பதை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பட்டாசு விற்பனைக்கும், தயாரிப்புக்கும் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னதாக சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை பயன்படுத்தி கொண்டு, ஹிந்து விரோத பெண்கள், சுய விளம்பரம் தேடிக்கொள்ள சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு செல்ல முயன்றனர். அந்த சர்ச்சைகள் ஓய்வதற்குள்ளாக மேலும் ஒரு அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தொடர்ந்து இது போன்ற உத்தரவுகள், நாட்டின் பெரும்பான்மையான மக்களான ஹிந்து மதத்தினரை புண்படுத்துவதாக இருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஹிந்து மதத்தை தொடர்ந்து குறி வைக்கிறதா உச்ச நீதிமன்றம் என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.
Next Story