Top
undefined
Begin typing your search above and press return to search.

"சபரிமலை தாந்த்ரீகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள்" : கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு

சபரிமலை தாந்த்ரீகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் : கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஹிந்துக்கள் மீதான வெறுப்பு

SG SuryahBy : SG Suryah

  |  24 Oct 2018 6:12 PM GMT

சபரிமலை தாந்த்ரீகள் குடும்பத்தினர் மீதுள்ள வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன். செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கு பெற்று பேசிய கேரள முதல்வர், சபரிமலை தாந்த்ரீகள் விபச்சாரத்தில் ஈடுப்பாட்டர் என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேசிய அவர், "சபரிமலை ஐயப்பன் நைஷ்டீக ப்ரம்மச்சாரி என்பதால் பெண்கள் செல்லக்கூடாது என்கிறார்கள். நான் அதை மறுக்கவில்லை. வட இந்தியாவிலும் இது போன்ற கோவில்கள் இருக்கின்றன. அங்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களும் ப்ரமச்சாரிகளாக இருக்கிறார்கள். ஆனால், நமது தந்த்ரீகளின் ப்ரமச்சரியம் நாம் அறிந்தது தான். நான் அவருடைய க்ரிஹஸ்தாஸ்ரமத்தை (திருமண வாழ்க்கையை) பற்றி பேசவில்லை. அதையும் தாண்டி அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டார். அது தானே எர்ணாகுலத்தில் நடந்த சம்பவம் ? இதையெல்லாம் நாம் மறக்க கூடாது. இதை பற்றி பேச வேண்டாம். ஐயப்ப பக்தர்களின் வழிபடும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்", என்று பேசியுள்ளார்.
தற்போது நடக்கும் சபரிமலை பிரச்சனைகளுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல், சபரிமலை தாந்த்ரீகள் குடும்பத்தினரை இவ்வாறு அவதூறு பேசி, கேரள முதல்வர் ஹிந்துக்கள் மீது வெறுப்பை விதைக்கிறார் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
Next Story