Top
undefined
Begin typing your search above and press return to search.

சர்ச்சைக்குரிய பெண் ரெஹானா பாத்திமா, இருமுடியில் தனது சானிட்டரி நாப்கின் எடுத்து செல்லவில்லை : காவல்துறை தரப்பில் விளக்கம்

சர்ச்சைக்குரிய பெண் ரெஹானா பாத்திமா, இருமுடியில் தனது சானிட்டரி நாப்கின் எடுத்து செல்லவில்லை : காவல்துறை தரப்பில் விளக்கம்

SG SuryahBy : SG Suryah

  |  24 Oct 2018 12:16 PM GMT

சர்ச்சைக்குரிய பெண், ரெஹானா பாத்திமா ஸ்வாமி ஐயப்பனின் இடுமுடிகட்டில் தனது சானிட்டரி நாப்கினை எடுத்து செல்லவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாக பூம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம், சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் நடை திறக்கப்பட்டிருந்த நிலையில், சன்னதிக்கு செல்ல சர்ச்சைக்குரிய பெண் ரெஹானா பாத்திமா முற்பட்டார். சன்னதிக்கு 500 மீட்டர் இடைவெளி முன் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு, அவர் இருமுடிகட்டில் தனது சானிட்டரி நாப்கினை எடுத்து சென்றதாக ஜனம் டி.வி வெளியிட்ட செய்தியை தமிழ் கதிர் வெளியிட்டது. இந்த நிலையில், அந்த செய்தியை மறுத்துள்ளது கேரள காவல்துறை.
இது குறித்து பூம் செய்தியிடம் தெரிவித்த பம்பை காவல்துறை இன்ஸ்பெக்டர் திரு கே.எஸ்.விஜயன், "நான் தான் ரெஹானா கொண்டு வந்த பையை சோதனை இட்டேன். சானிட்டரி நாப்கின் போன்ற எந்த பொருளும் அவரது பையில் இல்லை. பழங்கள் தான் இருந்தது. அவரது பையை சோதனை இட்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளோம்", என்று தெரிவித்துள்ளார்.
எனினும் காவல்துறை ரெஹானாவின் பையை சோதனையிட்டு எடுத்த புகைப்படங்கள் இன்னும் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story