Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தால் அதை கேரள அரசு ஆதரிக்காது : தொடரும் பினராயி விஜயனின் ஹிந்து மத வெறுப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தால் அதை கேரள அரசு ஆதரிக்காது : தொடரும் பினராயி விஜயனின் ஹிந்து மத வெறுப்பு

SG SuryahBy : SG Suryah

  |  24 Oct 2018 3:10 PM GMT

சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் நடை திறந்திருந்த ஐந்து நாட்களும், ஹிந்து விரோத பெண்கள் தங்களின் சுய விளம்பரம் தேடிக்கொள்ள சன்னிதானதிற்குள் நுழைய முயன்றனர். இதற்கு கேரள கம்யூனிஸ்ட் அரசும் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது. இதனை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களின் சபரிமலை புரட்சி விஸ்வரூபம் எடுத்தது. இதனையெல்லாம் அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தேவசம் போர்டு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், கேரள கம்யூனிஸ்ட் அரசின் முதல்வர் திரு. பினராயி விஜயன் அவர்கள் பேசுகையில், தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தால் அதற்கு கேரள அரசு ஆதரவு அளிக்காது என்று கூறியதாக மனோரமா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
"நிலைமையை பற்றி முறையாக அறிந்து கொள்ளாமல் தேவசம் போர்டு அறிக்கை சமர்பிக்குமேயானால் அதை கேரள அரசு ஆதரிக்காது", என்று கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதில்லை என்பதை உறுதி படுத்திய அவர், சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு வரும் அனைவருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தனது ஹிந்து விரோத போக்கில் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Next Story