Top
undefined
Begin typing your search above and press return to search.

18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : எடப்பாடி பழனிசாமி தலைமயிலான தமிழக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை

18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : எடப்பாடி பழனிசாமி தலைமயிலான தமிழக அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை

SG SuryahBy : SG Suryah

  |  25 Oct 2018 5:18 AM GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை உச்ச நீதிமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.
அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை ஆகஸ்டு 31-ம் தேதி நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
Next Story