Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊழல் மன்னன் ப.சிதம்பரம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முதல் குற்றவாளி : குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை!

ஊழல் மன்னன் ப.சிதம்பரம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முதல் குற்றவாளி : குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை!

SG SuryahBy : SG Suryah

  |  25 Oct 2018 1:51 PM GMT

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கத் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த குற்றப் பத்திரிக்கையில் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி உட்பட 9 நபர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நிதி அமைச்சரின் பெயர் ஊழல் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்று இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அப்போது INX Media ₹350 கோடி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக முறைகேடாக அனுமதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் தனித்தனியாக மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது. ஏற்கனவே சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்திக் சிதம்பரம் உட்பட 16 பேர் மீது பாட்டியாலா நீதி மன்றத்தில் சிபிஐ இதற்கு முன்னதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இவ்வழக்குகள் தொடர்பாக சி.பி.ஐ-யோ, அமலாக்கத்துறையினரோ தன்னை கைது செய்ய இயலாத வகையில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். INX Media முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் மறுத்து உத்தரவிட்ட முக்தா குப்தா அமர்வு, நவம்பர் 25 வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story