Top
undefined
Begin typing your search above and press return to search.

1650 கம்யூனிஸ்டுகளை சபரிமலை சன்னதியில் பணியில் அமர்த்த கேரள கம்யூனிஸ்ட் அரசு திட்டம் : எப்படியாவது ஹிந்து விரோத பெண்களை சன்னதிக்கு அழைத்து செல்லும் திட்டமா ?

1650 கம்யூனிஸ்டுகளை சபரிமலை சன்னதியில் பணியில் அமர்த்த கேரள கம்யூனிஸ்ட் அரசு திட்டம் : எப்படியாவது ஹிந்து விரோத பெண்களை சன்னதிக்கு அழைத்து செல்லும் திட்டமா ?

SG SuryahBy : SG Suryah

  |  26 Oct 2018 2:39 PM GMT

சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் சன்னதியில் மண்டலகால மகரவிளக்கு அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், பினராயி விஜயன் தலைமையில் உள்ள கேரள கம்யூனிஸ்ட் அரசு, கம்யூனிஸ்டுகள் படையை சபரிமலை ஐயப்பன் சன்னதியில் பணி அமர்த்த திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மனோரமா, கம்யூனிஸ்ட்களை மட்டும் பணி அமர்த்த தேவசம் போர்டை கேரள அரசு வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிரசதாம் தயாரிப்பது, உணவு மற்றும் குடிநீர் பரிமாறுவது, அலுவலக வேலை, கெஸ்ட் ஹவுஸ் போன்ற வேளைகளில் ஈடுபட 1680 தற்காலிக பணியாளர்களை தேவசம் போர்டு பணி அமர்ந்தும். அதில் 1650 பணியாளர்கள் சன்னிதானத்தில் பணி அமர்த்த படுவார்கள். மீதம் உள்ளவர்கள் நிலக்கலில் பணி அமர்த்த படுவார்கள். இந்த பணிகளில் கம்யூனிஸ்ட்களை மட்டும் பணி அமர்த்த கேரள அரசு பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி ஹிந்து விரோத சர்ச்சைக்குரிய பெண்களை சன்னிதானதிற்குள் அழைத்து செல்ல கேரள அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில், தற்போது சபரிமலை முழுவதும் கம்யூனிஸ்ட்களை பணி அமர்த்தி அதை செய்து காட்ட வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் அரசு பிடிவாதம் பிடித்துள்ளது.
தனது ஹிந்து மத வெறுப்பின் காரணமாக கேரள கம்யூனிஸ்ட் அரசு, இரண்டாயிரதிற்கும் மேற்பட்ட அப்பாவி ஐயப்ப பக்தர்களை கைது செய்துள்ளது. இதை கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளதுடன், சுய விளம்பரம் செய்து கொள்ள இப்படி காரணம் இல்லாமல் கைது செய்யாதீர்கள் என்று கடிந்துள்ளது. எனினும் பினராயி தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசு, தனது ஹிந்து மத வெறுப்பில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிக்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஐயப்ப பக்தர்களை கைது செய்த கேரள பினராயி அரசு : சுய விளம்பரம் தேட கைது செய்யாதீர்கள் என கேரள உயர்நீதிமன்றம் கடும் தாக்கு
Next Story