Top
undefined
Begin typing your search above and press return to search.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஐயப்ப பக்தர்களை கைது செய்த கேரள பினராயி அரசு : சுய விளம்பரம் தேட கைது செய்யாதீர்கள் என கேரள உயர்நீதிமன்றம் கடும் தாக்கு

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஐயப்ப பக்தர்களை கைது செய்த கேரள பினராயி அரசு : சுய விளம்பரம் தேட கைது செய்யாதீர்கள் என கேரள உயர்நீதிமன்றம் கடும் தாக்கு

SG SuryahBy : SG Suryah

  |  26 Oct 2018 12:51 PM GMT

அமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைத்து, பிறகு காவல்துறை தடியடி நடத்தி அதன் பின்னர் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய ஹிந்து விரோத பெண்களை சபரிமலை ஐயப்பன் ஸ்வாமி சன்னதியில் நுழைய வைக்க கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அற வழி போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கடந்த இரு நாட்களாக பினராயி தலைமையிலான கேரள அரசின் போலீஸார் தீவிரமாக இறங்கி உள்ளனர். கடந்த இரு நாட்களில் இதுவரை 452 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 2,300 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். இதில் 700 பேர் மட்டும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தி இந்து
செய்தி குறிப்பு
தெரிவிக்கிறது.
இந்நிலையில், பத்தினம்திட்டாவைச் சேர்ந்த சுரேஷ் குமார், அனோஜ் குமார் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், சபரிமலைப் போராட்டத்தில் பங்கேற்றோம் எனக் கூறி அப்பாவி மக்களையும், அந்த போராட்டத்துக்கு தொடர்பில்லாதவர்களையும் போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் கைது நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மாநில அரசைக் கடுமையாக எச்சரித்தனர் என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கறது. சபரிமலையில் போராட்டம் நடத்தினார்கள் என்ற போர்வையில் சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் அரசும், போலீஸாரும் இறங்கக்கூடாது. கைது நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான விளக்கம் தேவை.
போராட்டத்தில் பங்கேற்று இருந்தார்கள் என்று உறுதி செய்தபின்பு தான் போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டும். அதைவிடுத்து அப்பாவிகளையும், போராட்டத்தில் பங்கேற்காதவர்களையும் கைது செய்தால், அரசு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
Next Story