Top
undefined
Begin typing your search above and press return to search.

'சிட்லபாக்கம் ரைசிங்' தொண்டு நிறுவனத்தினர் கைதும் அதன் போராட்டமும் : யார் இந்த 'சிட்லபாக்கம் ரைசிங்' தொண்டு நிறுவனம் ? : திடுக்கிடும் உண்மைகள்

சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு நிறுவனத்தினர் கைதும் அதன் போராட்டமும் : யார் இந்த சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு நிறுவனம் ? : திடுக்கிடும் உண்மைகள்

SG SuryahBy : SG Suryah

  |  25 Oct 2018 7:56 PM GMT

சென்னை கிரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் ₹12 கோடியும், உள்ளாட்சித்துறை சார்பில் ₹5 கோடியும் நிதி ஒதுக்கி மூடுகால்வாய்(கட் அண்ட் கவர்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் ₹44½ லட்சத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பேரூராட்சி இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.அப்போது அங்குவந்த அதே பகுதியைச் சேர்ந்த "சிட்லபாக்கம் ரைசிங்" தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கால்வாய் அமைக்கும் பணிகளை தடுத்ததாகவும், அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தன் செல்போனை அதிகாரிகள் பறித்துக்கொண்டதாக சிவகுமார் என்பவரும், கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பாலசந்தர், குமார் என்ற குமார் சுப்பிரமணியம் ஆகியோர் மீது சிட்லபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசனும் என இருவரும் தனித்தனியாக சிட்லபாக்கம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இருதரப்பினர் அளித்த புகார்கள் மீது விசாரணை நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகள், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து சிட்லபாக்கம் காவல்துறை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிட்லபாக்கம் ஜோதிநகரைச் சேர்ந்த பாலசந்தர் (29), அடிகளார் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி குமார் என்ற குமார் சுப்பிரமணியம் (61) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று தந்தி
செய்தி குறிப்பு
தெரிவிக்கறது.
இதனை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் திரு. ஸ்டாலின்.



பிறகு, கைது நடவடிக்கையை கண்டித்து தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜா தலைமையில் தி.மு.க-வினர் வரதராஜா திரையரங்கச் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள் என்று விகடன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


[caption id="attachment_4279" align="alignnone" width="300"] Picture Courtesy : Vikatan[/caption]
இது குறித்து, சிட்லபாகத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் கதிரிடம் கூறுகையில், " 'சிட்லபாக்கம்  ரைசிங்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சில ஆண்டுகளாக இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை என்று சொன்னாலும் தமிழ் நாட்டில்  சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வகிக்கும் ஒரு கட்சியை சார்ந்தவர்கள் இதில் இடம் பிடித்துள்ளது உண்மை தான்
. "கட்  அண்ட் கவர் ட்ரைன்" என்ற திட்டம்  சிட்லபாக்கம் ஏரியில் வெள்ள நீர் வரும் பட்சத்தில் அதை செம்பாக்கம் ஏரிக்குள் நுழையும் வண்ணம் செய்வதாக சிட்லபாக்கம் பேரூராட்சியின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் சரியான முறையில் டெண்டர் விடாமல் செய்தது என்று சிட்லபாக்கம் பேரூராட்சியின் மேல் குற்றம் சாட்டியுள்ளது  சிட்லபாக்கம் ரைசிங்
. இதற்கு முன்பும் சில தருணங்களில் சிட்லபாக்கம் ரைசிங், சிட்லப்பாக்கம் பேரூராட்சியையும் ஆளும்கட்சியையும் எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ளது .
சனிக்கிழமையன்று  பணி நடக்கும் இடத்தில் ஒர்க் ஆர்டர் கேட்டு சம்பந்தபட்ட அதிகாரிகளிடமும் காண்ட்ராக்டரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிட்லபாக்கம் ரைசிங். இதில் இந்த நிகழ்வுகளை படம் பிடித்த ஒரு ஆர்வலரின் கைபேசியை பேரூராட்சி அதிகாரி பிடுங்கி கொண்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது
. பின்னர் பேச்சுவார்த்தையில் காவல்துறை சுமூகமாக பிரச்னையை முடித்தது . பின்பு இந்த பிரச்சனையில் சிட்லபாக்கம் பேரூராட்சியின் தரப்பில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில் குமார், பாலச்சந்தர், சிவகுமார் மற்றும் சுனில் ஜெயராமன் (சிட்லபாக்கம் ரெய்சிங்கின் முக்கிய காரியகர்த்தா ) இவர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. 
இதில் குமார், பாலசந்தர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். சிவகுமார் தலைமறைவாகி உள்ளார். சுனில் ஜெயராமன் பல நாட்கள் முன்பே சுவிஸ்சர்லாந்து சென்று விட்டார்.      
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பொன்னையா இந்த குற்றச்சாட்டை பொய்யானது என திட்டவட்டமாக மறுத்துள்ளார்
. தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற முத்திரையில் சுற்றி வரும் "சிட்லபாக்கம் ரைசிங்" நபர்கள் கைதுக்கு பின்பு பல அரசியல் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. எதிர் கட்சி இதில் மிகவும் ஆர்வம் காட்டுவது அதன் நடவடிக்கைகள் மூலமாகவே தெரிகிறது.  எதிர் கட்சியின் சார்பில் போராட்டமும் நடைபெற்றுள்ளது
. எதிர் கட்சிகளுக்கு ஏன் இந்த சமூக ஆர்வலர்கள் மேல் இவ்வளவு அக்கறை?. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 2 நபர்கள் கைதாகி சிறையில் அடைக்கபட்ட நிலையில் "சிட்லபாக்கம் ரைசிங்" யின்  முக்கிய புள்ளியான சுனில் ஜெயராமன் நிம்மதியாக ஸ்விட்ஸ்ர்லாந்தில் இருந்து வீடியோவும் கருத்துகளும் முகநூலில் வெளியிடுகிறார்", என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கைதாகி புழல் சிறையில் இருக்கும் இருவரும் இன்று வெளிவரும் நிலையில், அவர்களை வரவேற்க ரைசிங் சிட்லபாக்கம் தொண்டு நிறுவனதினர் காலை 8 மணியளவில் புழல் சிறை அருகே ஒன்றுகூட தெரிவிக்கிப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை போல் சிறை கைதிகளை வரவேற்க ஒரு தொண்டு நிறுவனம் செயல்படுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
[caption id="attachment_4280" align="alignnone" width="194"] Screenshot from Chitlapakkam Rising Facebook Page[/caption]
இந்த நிலையில், சிட்லபாக்கத்தில் இவ்வளவு பெரிய ஊழல் நடந்ததாக கூறி, ஆர்ப்பாட்டம் நடத்திய தாம்பரம் எம்.எல்.ஏ S.R.ராஜாவிற்கு இது பற்றி முன்னரே தெரியாமல் போனது ஏன் என்றும், 2 பேர் கைதுக்கு முன்னரே அந்த திட்டத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ ஏன் ஒப்பந்தாரரிடம் ஒர்க் ஆர்டர் கேட்கவில்லை என்றும் சிட்லபாக்கம் பேரூராட்சியை கண்டித்து 2 பேர் கைதுக்கு முன்னரே ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கைதுக்கு பின் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை சிட்லபாக்கம் வாசிகள் முன் வைக்கின்றனர்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் தி.மு.க பதில் அளிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Next Story