Top
undefined
Begin typing your search above and press return to search.

"ஐயப்ப பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும்" கேரளாவில் ஸ்வாமியே சரணம் ஐயப்பா கோஷங்களுக்கு மத்தியில் கர்ஜித்த அமித் ஷா!

ஐயப்ப பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும் கேரளாவில் ஸ்வாமியே சரணம் ஐயப்பா கோஷங்களுக்கு மத்தியில் கர்ஜித்த அமித் ஷா!

SG SuryahBy : SG Suryah

  |  27 Oct 2018 10:55 AM GMT

கேரள மாநிலம், கண்ணூருக்கு இன்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா இன்று வருகை புரிந்தார். பா.ஜ.க கண்ணூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். பா.ஜ.க கேரளா முன்னாள் மாநில தலைவர் மாரார் நினைவாக இந்த அலுவலகம் "மாரார் பவன்" என பெயரிடப்பட்டுள்ளது.
https://twitter.com/AmitShah/status/1056116014939811840?s=20
இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டுமிராண்டித்தனத்தால் உயிர்நீத்த பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
https://twitter.com/AmitShah/status/1056131379883376640?s=20
இதைதொடர்ந்து நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அவர் பேசுகையில், இன்று கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில ஹிந்து அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரம் தொண்டர்களை கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு கைது செய்துள்ளது. பக்தர்களுடன் பா.ஜ.க பாறை போல் உறுதியாக நிற்கிறது. இது இடதுசாரி அரசிற்கு விடப்படும் எச்சரிக்கையாகும். இந்தியாவில் பல கோயில்களில் பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் உள்ளன என்பதை, நீதிமன்ற உத்தரவின் பேரில், சபரிமலை கோயிலுக்கு சென்று வன்முறையை ஏற்படுத்த தூண்ட நினைத்தவர்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது; பா.ஜ.க, பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் துணை நிற்கும் என்று உறுதிபடுத்தினார்.
சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை; நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம் என பினராய் விஜயனுக்கு கேரள அரசிற்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமித் ஷா.
https://twitter.com/AmitShah/status/1056133606186409990?s=20
Next Story