Top
undefined
Begin typing your search above and press return to search.

வதந்தியை எரிய விட்டு குளிர் காயும் காங்கிரஸ் - பிரதமருக்கு மேக்கப் செய்பவருக்கு மாத ஊதியம் ₹15 லட்சம் என பரப்பப்படும் அபாண்ட பொய்!

வதந்தியை எரிய விட்டு குளிர் காயும் காங்கிரஸ் - பிரதமருக்கு மேக்கப் செய்பவருக்கு மாத ஊதியம் ₹15 லட்சம் என பரப்பப்படும் அபாண்ட பொய்!

SG SuryahBy : SG Suryah

  |  27 Oct 2018 3:24 AM GMT

இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்கப் செய்வது போன்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வெளியானது. மேலும், அந்த மேக்கப் செய்பவருக்கு மாத ஊதியம் ₹15 லட்சம் என்றும் ஒரு செய்தி பரவியது. சமூக வலைதளத்தில் இது பற்றியான விவாதம் காரசாரமாக பரவியது.


கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, காங்கிரஸ் பிரமுகர் ஆதித்ய சதுர்வேதி என்பவர் தன் பேஸ்புக் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு ஒரு பெண் அலங்காரம் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, "மோடி தனக்கு அலங்காரம் செய்பவருக்கு மாதம் ₹15 லட்சம் சம்பளம் வழங்குகிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், 15,000 ஷேர், 700 லைக்குகள் என அள்ளியது.


இது சரியான தகவலா என்றும் சமூகவலைதளத்தில் ஆராயப்பட்டது. பின்னர், பலர் ஆராய்ந்ததில் இந்த புகைப்படம் லண்டன் மெழுகுச்சிலை வைக்கும் மியூசியத்தில் எடுக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் உலகத் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற பிரபலங்களின் மெழுகுச்சிலை வைக்கப்படும் மியூசியத்தில் இந்திய பிரதமர் மோடிக்கும் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2016-ஆம் ஆண்டு, அந்தச் சிலை செய்வதற்காகச் சிலைசெய்யும் கலைஞர்கள், மோடியின் உருவ அளவை எடுக்கும் போது எடுத்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருவது என்றும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் வைத்துள்ள மேக்கப் உபகரணத்திலேயே மியூசியம் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்படி அடிப்படை அறிவு கூட இல்லாமல் பிரதமர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் காங்கிரசில் ஒரு குழு களமிறங்கியுள்ளது வேதனை அளிக்கிறது.

Next Story