Top
undefined
Begin typing your search above and press return to search.

தெலுங்கானாவில் சுப்ரபாதம் ஒலிப்பெருக்கியதால் கோவில் அர்ச்சகர் மாற்று மதத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டார்

தெலுங்கானாவில் சுப்ரபாதம் ஒலிப்பெருக்கியதால் கோவில் அர்ச்சகர் மாற்று மதத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டார்

SG SuryahBy : SG Suryah

  |  28 Oct 2018 12:24 PM GMT

தெலுங்கானா மாநிலம், வாரங்கலில் சிவசாய் கோவிலின் அர்ச்சகர்,  தண்டபண்டுலா சத்யநாராயனா அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று தெலுங்கானா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழைமை காலை அன்று கடக ஆர்த்தி நேரத்தின் போது, சுப்ரபாதத்தை ஒலிபெருக்கியதால் மாற்று மதத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையாக தாகப்பட்டதில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா காட்சிகள் உதவியுடன் மாத்வாடா காவல்துறையினர் குற்றம் புரிந்தவரை கைது செய்துள்ளது என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
குற்றம் புரிந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுளதாக காவல்துறை இன்ஸ்பெக்டர் எல்.ஜீவன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாவட்ட பா.ஜ.க தலைவர், ராவ் பத்மா ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ தர்மா ராவ் மற்றும் பா.ஜ.க-வினர் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
Next Story